புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014


விபத்தில் காயமடைந்த ஐ.தே.க எம்பியின் இடது கால் அகற்றப்பட்டுள்ளது
தெற்கு அதிவேக பாதையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெருவின் இடது கால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை தெற்கு அதிவேகப் பாதையின் 30-40 கட்டைப் பகுதியில் அஜித் மானப்பெரும பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான அவர், நாகொட வைத்தியசாலையில் ஆரம்ப சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இதனையடுத்து இன்று மாலை மருத்துவர்கள் மேற்கொண்ட அறுவைச் சிகிச்சையில், எம்பியின் இடது கால் முழங்காலுக்கு கீழ் அகற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தின் போது வாகனத்தில் மூவர் பயணம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ad

ad