புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014

இந்தியா தரபபடுதல் வரிசையில் முதலாம் இடம்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.
புதிய தரப்படுத்தலின்படி இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் லீக்கில் ஜிம்பாப்வேயுடன் அதிர்ச்சி தோல்வியடைந்ததால் அவுஸ்திரேலியா முதலிடத்தை இழந்துள்ளது.
இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் தலா 113 புள்ளிகள் பெற்றிருந்த போதிலும் மயிரிழையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியா 113.49 புள்ளிகளும், தென்ஆப்பிரிக்கா 112.96 புள்ளிகளும் பெற்றுள்ளன.
இரண்டாமிடத்தில்  தென் ஆப்ரிக்க அணியும் மூன்றாமிடத்தில் இலங்கை அணியும் உள்ளன.
தரப்படுத்தலின்படி அணிகளின் விபரம் வருமாறு,
1. இந்தியா (113.49புள்ளி)
2.தென் ஆப்பிரிக்கா(112.96 புள்ளி)
3.இலங்கை (111 புள்ளி)
4. அவுஸ்திரேலியா (111 புள்ளி)
5.இங்கிலாந்து (107 புள்ளி)
6. பாகிஸ்தான் (100 புள்ளி)
7. நியூசிலாந்து (98 புள்ளி)
8.மேற்கிந்திய தீவுகள் (96 புள்ளி)
9.வங்காளதேசம் (69 புள்ளி)
10. ஜிம்பாப்வே (58 புள்ளி)
11.ஆப்கானிஸ்தான் (42 புள்ளி)
12. அயர்லாந்து (33 புள்ளி)

ad

ad