புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014


தமிழகம் முழுவதும் நீண்டகாலமாக சிறைகளில் இருந்த விசாரணை கைதிகள் 2,500-க்கும் மேற்பட்டோர் விடுதலை

இந்தியா முழுவதும் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் விசாரணை கைதிகளை விசாரித்து, அவர்களுடைய தண்டனை காலத்தில் பாதிக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய மற்றும் கிளைச் சிறைகளில் நேற்று லோக் அதாலத் முறையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உட்பட்ட சிறிய வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் வழக்குகள் மீது விசாரணை நடத்தப்பட்டு, 2,500-க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். 

இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பணி ஆணைய குழு உறுப்பினர் செயலாளர் நீதிபதி கோ.அருள் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் விசாரணை கைதிகளுக்காக லோக் அதாலத் நடத்தப்பட்டது. இதில் சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் இதுவரையில் சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலமாக கருதி அவர்கள் விடுவிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் கிளைச் சிறைகளில் நடந்த லோக் அதாலத்தில் சுமார் 850 விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். சென்னை மாவட்டத்தில் 290 பேரும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 260 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 304 பேரும் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad