புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014




நீதிமன்ற வளாகம் இத்தனை உன்னிப் பான கவனிப்போடு இருப்பது அரிதினும் அரிதுதான். செப்டம்பர் 2-ந் தேதியன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில்தான் இந்த உன்னிப் பும் கவனிப்பும். காரணம்... சொத்துக்குவிப்பு வழக்கில் கூட்டுச்சதி என்ற வார்த்தைக்கு எதி ராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை இறுதித் தீர்ப்புடன் சேர்த்து அளிப்ப தாக நீதிபதி குன்ஹா போட்ட உத்தரவை எதிர்த்து ஜெ. தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுமீதான விசாரணை நாள் அது. 

மனுவை விசாரித்த நீதிபதி பனீந்தர், சொத்துக்குவிப்பு வழக்கின் அரசு வழக்கறிஞரான பவானி சிங்கை நியமித்தபோது சட்டத்துறை செயலாளராக இருந்ததால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று கூறி, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பார்வைக்கு அனுப்பி வைத்தார். இனி, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி யாரை நியமிக்கிறாரோ அவர்தான் இதனை விசாரிக்கவேண்டும். முக்கியமான உத்தரவுகள் ஏதேனும் வரும் என்ற எதிர்பார்ப்புடன் கர்நாடகாவின் சீனியர் வழக்கறி ஞர்கள், தமிழகத்திலிருந்து வந்திருந்த வழக்கறிஞர்கள் என நிறைந்திருந்த கோர்ட் வளாகத் தில் சற்று ஏமாற்றம்தான் தென்பட்டது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் கம்பெனிகளை சேர்த்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு அதேநாளில் மதியம் வந்தபோது, அதனை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார். வியாழனன்று (செப்.04) இந்த மனு மீது உடனே தீர்ப்பளிக்க வேண்டும் என ஜெ. தரப்பில் வாதாடப்பட்டது. இது ஏற்கத் தக்க மனுவா இல்லையா என்பதே உறுதியாகாத நிலையில், 10-ந்தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார் நீதிபதி. அன் றைய தேதியிலாவது சாதகமான உத்தரவை பெறலாம் என நம் பிக்கை கொண்டது மனுதாரர் தரப்பு. செப்டம்பர் 20-ந் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு என ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா உத்தரவிட்டுள்ள நிலையில், அதற் குத் தடையாக இந்த மனுக்கள் அமையலாம் என்பதுதான் வழக் கைத் தாக்கல் செய்தவர்களின் எதிர்பார்ப்பு.

நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நம்மிடம் பேசிய கர்நாடக ஹைகோர்ட் சீனியர் வக்கீல்கள், ""எப்படி தடை கொடுக்கமுடியும்? இந்த ஹை கோர்ட் பெஞ்ச் ஏற்கனவே கொடுத்த ஒரு உத்தரவில், "கீழ்க் கோர்ட்டிலே ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட் என்றால் நாம் அதில் தலையிட முடியாது' என்று சொல்லியிருக்கிறது. இந்த மனுவே விநோதமான புதுவிதமான மனுவாக இருக்கிறது. ஸ்பெஷல் கோர்ட்டில் நடக்கிற சொத்துக் குவிப்பு வழக்கு என்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. நாங்க மட்டுமில்ல, இந்தியாவே இதன் முடிவை எதிர்பார்த்திருக்குது'' என்றார்கள் சட்டப்புத்தகங்களைப் புரட்டியபடி.

தமிழகத்திலும் கர்நாடகத்திலும் மட்டுமின்றி இன்னும் பல மாநிலங்களிலும் இந்த வழக்கின் தீர்ப்பு ஜெ.வுக்கு சாதக மாகுமா, பாதகமாகுமா என அரசியல் வட்டாரத்திலும், தொழிலதிபர்கள் தரப்பிலும் "பெட்' கட்டப்பட்டு வருகிறது.

இந்தியாவே எதிர்நோக்கும் வழக்கு பற்றி டெல்லி கவனிக்காமல் இருக்குமா என்ற கேள்வியோடு டெல்லியில் உள்ள நமது தொடர்புகளை நேரில் சந்தித்தோம். ஜப்பான் செல்வதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி தொழில் துறையில் உள்ள தனது நெருங்கிய சகாக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். நம் டெல்லித் தொடர்புகள் மூலம் அவர்களை சந்தித்தபோது கவனமாகவே பேசினார்கள். ""நீங்க மதராஸி. உங்களுக்கு முதலில் எங்க குஜராத்காரரான மோடியைப் பற்றி சொல்லிடுறோம். அவர் அரசியல்வாதி, ஆர்.எஸ்.எஸ்காரர்ங்கிறதெல்லாம் உண்மைதான். எல்லாத் தையும்விட குஜராத்காரர்களுக்கேயுரிய பிசினஸ் மைன்ட் தான் அவரோட பிரதான பலம். எதிலும் என்ன லாபம்னு கணக்குப் போடுறதுதான் பிசினஸ் மூளை. 

உங்க மெட்ராஸ் ஹைகோர்ட்டுக்கு ஆக்ட்டிங் சீஃப் ஜட்ஜா சதீஷ் அக்னிகோத்ரி இருந்தாரே அவரையே நிரந்தர சீஃப் ஜட்ஜா நியமிக்கும்படி பிரதமருக்கு உங்க சி.எம்.மோட கோரிக்கை. சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் மூலமாவும் சொல்லியிருந்தார். இதை மோடிகிட்டே ரவிசங்கர் பிரசாத் சொன்னப்ப, "அதிலெல்லாம் நாம அதிகமா தலையிட வேணாம். முறைப்படி யார் வரணுமோ வரட்டும்'னு மோடி சொல்லிட்டாரு. முறைப்படி தலைமை நீதிபதியா கவுல் பதவியேத்துட்டாரு. அதேமாதிரி ஜெ.வோட கேஸ் சம்பந்த மாகவும் மோடிகிட்டே ரவிசங்கர் பிரசாத் பேசி யிருக்காரு'' என்றவர்கள் அந்த விவரம் பற்றியும் சொல்லத் தொடங்கினார்கள்.

"கேஸின் தீர்ப்பு பற்றி ஜெ.வோட மனநிலை என்னங்கிறதுதான் மோடி கிட்டே பிரசாத் சொன்ன விஷயம். அதாவது, இந்த கேஸ் தனக்கு சாதகமா அமையணும், இல்லைன்னா முடிஞ்சளவு இழுத்தடிக்கப்படணும்ங்கிறதுதான் ஜெ.வோட விருப்பம்ங்கிறதை சொல்லி யிருக்காரு. பொறுமையா கேட் டுக்கிட்ட மோடி, ஊழல் வழக்குகள் சம்பந்தமா ஹைகோர்ட்டுகளும் சுப்ரீம்கோர்ட்டும் சமீபகாலமா ரொம்ப சீரியஸா இருப்பதைச் சொல்லி "இதில் நாம மூக்கை நுழைச்சா கெட்ட பேருதான் வரும். ஜெ. விடுவிக்கப்பட்டா நமக்கு சந்தோஷம்தான். இல்லைன்னாலும் நமக்கு எந்த கஷ்ட நஷ்டமும் இல்லை. தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்கிறது சம்பந்தமா அமித்ஷா தீவிரமா ஆலோசனை பண்ணிக்கிட்டிருக்காரு. பல விஷயங்களை என்கிட்டே சொல்லியிருக்காரு. அங்கே எதிர்க்கட்சியான தி.மு.க. சீக்கிரத்தில் ஸ்டாலின் கைக்குப் போயிடும்னு சொல்றாங்க. ஸ்டாலின்னா நாம ஈஸியா ஹேண்டில் பண்ணிக்கலாம். பா.ஜ.கவை நல்லா வளர்க்கலாம். இந்த சமயத்தில் நாம ஏன் ஜெயலலிதாவுக்கு கை கொடுத்து அவரை ஸ்ட்ராங்க் பண்ணணும்'னு ரவிசங்கர்பிரசாத்கிட்டே மோடி கேட்டிருக்காரு. இதுதான் இப்ப மோடியோட மனநிலை. இந்த மைன்ட்செட்டோடுதான் அவர் ஜப்பானுக்குப் போனார்'' என அவரை சந்தித்த தொழில்துறை புள்ளிகள் நம்மிடம் சொன்னார்கள்.

சென்னையில் என்ன மனநிலை என்பதறிய திரும்பினோம். அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக 7வது முறையாக ஆகஸ்ட் 29ந் தேதி முறைப்படி தேர்வு செய்யப்பட்டார் ஜெ. அதற்கு முதல்நாள்தான், செப்டம்பர் 20ல் தீர்ப்புன்னு தேதி குறிக்கப்பட்டது. அதுபற்றியெல்லாம் கட்சித்தொண்டர்கள்கிட்டே எந்த கவலையும் இல்லை. அவர்கள் வழக்கம்போல தலைமைக்கழகம் இருக்கிற அவ்வை சண்முகம் சாலை யிலே குவிந்துவிட்டார்கள். மந்திரிகளிலும் பெரும்பாலானவர்கள்கூட, "கேஸெல்லாம் நம்ம அம்மாவுக்கு ஒரு விஷயமா, ஊதித்தள்ளிட்டு வெளியே வந்திடுவாங்க' என்றுதான் பேசியபடி இருந்தனர். நால்வர் அணி உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களிடம் மட்டும்தான் தீர்ப்பு தேதி குறித்த கவலை தெரிந்தது. அதற்கு காரணமும் இருந்தது.

இதற்குமுன் கட்சியின் பொதுச்செயலாளராக ஜெ. தேர்ந்தெடுக்கப் பட்டபோதெல்லாம், நிகழ்ச்சி நிரல் என்னவென்று முன்கூட்டியே சொல்லப்பட்டு விடும். அமைச்சர்கள் போயஸ் கார்டனுக்குச் சென்று ஜெ.வின் கார் புறப் பட்டதும் அவர்களும் தங்கள் கார்களில் பின்தொடர்ந்து தலைமைக்கழகத் திற்கு வருவார்கள். இம்முறை பொக்கேக்கள் முதல்நாள் மாலையிலேயே வாங்கி வைக்கப்பட்டிருந்தும் கார்டனிலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. ஆகஸ்ட் 29 என்பதால் வெள்ளிக்கிழமை 10.30 முதல் 12 மணிவரை  ராகுகாலம். அதனால் 10 மணிக்கு முன் பாகவே தலைமைக் கழகத்திற்கு ஜெ. வந்துவிடுவார் என்றும் 9 மணிக்கெல்லாம் போயஸ்கார்டனில் தாங்கள் இருக்க வேண்டும் என்றும் மந்திரிகள் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கார்டனிலிருந்து தகவல் வராததால் ஓ.பி.எஸ்., நத்தம் போன்ற சீனியர்கள், "உங்களுக்கு ஏதாவது தகவல் வந்ததா' என ஒருவருக்கொருவர் கேட்டபடி இருந்தனர். எந்தத் தகவலும் இல்லை என்பதால் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை மட்டும் கார்டனில் கொண்டு வந்து கொடுக்கச் சொல்லி விடுவாரோ என்ற யோசனையும் சீனியர் அமைச்சர்களிடம் இருந்தது.

இந்த பதட்டமான நிலையில்தான், "நானே நேரடியாகத் தலைமைக் கழகத்திற்கு வந்துவிடுகிறேன்' என்று அமைச்சர்களுக்குத் தகவல் வந்து சேர்ந்தது. தீர்ப்பு தேதி அவரை டிஸ்டர்ப் செய்திருக்கிறது என்பதை சீனியர் கள் புரிந்துகொண்டார்கள். ஆனால், தொண்டர்களிடமும் நிர்வாகிகளிட மும் உற்சாகம் கரைபுரண்டது. முன்புபோல தலைமைக்கழகம் ஏரியாவில் பெரிய கட்-அவுட்டுகள் அதிகளவில் இல்லை. கார்டனிலிருந்து தலைமைக்கழகம் வரை அளிக்கப்படும் வரவேற்புகளும் இல்லை. தொண்டர்களின் கூட்டம் பலமாக இருந்தது. பட்டாசு சத்தமும் காதைக் கிழித்தது. வரும் வழியில் ஆங்காங்கே வண்டியை நிறுத்தி தொண்டர்களிடம் பொக்கே வாங்குவது வழக்கம். இம்முறை 12 மணி 8 நிமிடங்களுக்குத் தலைமைக்கழகத்திற்கு வந்த ஜெ.வின் முகத்தில் மகிழ்ச்சியும் இல்லை, இறுக்கமும் இல்லை. கட்சித் தேர்தல் பொறுப் பாளரான விசாலாட்சி நெடுஞ்செழியன், ஜெ.விடம் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை அளிக்க, "நன்றிம்மா' என்றபடி வாங்கிக் கொண்டார் ஜெ. 


உள்ளுக்குள் பல யோசனைகள் இருந்தாலும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரண்டிருந்ததில் அவருக்கு புது மகிழ்ச்சி ஏற்பட்டது என்கிறார்கள் அங்கிருந்தவர்கள். அதன் வெளிப்பாட்டையும் குறிப்பிட்டார்கள்.

மந்திரிகள் வரிசையாக வந்து பொக்கே கொடுத்தபோது வாங்கிக்கொண்ட ஜெ., சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த தங்க தமிழ்ச்செல்வனைப் பார்த்ததும், "வாங்க' எனக் கூப்பிட்டு பொக்கேவைப் பெற்றுக்கொண்டார். இதுபோலவே நாமக்கல் சுந்தரம், கோவை எம்.பி. நாகராஜன் ஆகியோரையும் பெயர் சொல்லி அழைத்து பொக்கேவை வாங்கியிருக் கிறார். 

தீர்ப்பு தேதி நெருங்கிக்கொண்டிருப்பதால் அது தொடர்பான ஆலோசனைகளுக்காக அழைக்கப் படும்போது செல்வதற்கு வசதியாக சென்னையிலேயே இருக்க வேண்டியிருக்கும் என சீனியர் அமைச் சர்கள் நினைத்திருந்தனர். ஜெ.வோ தலைமைக் கழகத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக உள்ளாட்சி இடைத்தேர்தல் பணி களைப் பார்க்கும்படி சீனியர்களுக்கு உத்தரவிட்டார். கோவைக்கு ஓ.பி.எஸ்., நெல்லைக்கு வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, தூத்துக்குடிக்கு நத்தம் விஸ்வநாதன் என மேயர் தேர்தல் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பு தரப்பட்டது. 

ஜெ.வின் வழக்கறிஞர்கள் இந்த வழக்கு சாதகமாகவே இருக்கும் என நம்பிக்கை அளித்துள்ளனர். 99% நம்பிக்கை இருந்தாலும், 1% அவநம்பிக்கை இருக் கிறது. எதிரான சூழல் அமைந்தால் ஆட்சி, கட்சி  என எதிர்கால நெருக் கடிகள் ஏற்படும். தீர்ப்பு சாதகமாகி விட்டால் இனி எவ்வித சட்டச் சிக்கலும் இல்லாமல், வாழ்நாள் முழுக்க சி.எம்.மாகவே நீடிக்கலாம் எனக் கணக்குப் போடுகிறது போயஸ் கார்டன். 

இந்திய அரசியல் எதிர் பார்க்கும் தீர்ப்பு என்பதால் எல்லா மட்டங்களிலும் அதிர்வு கள் தெரிகின்றன. அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, தர்மபுரியில் பஸ் எரிக்கப்பட்டு கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் மூவர் பலியாயினர். தற்போது அ.தி.மு.க ஆளுங்கட்சியாக உள்ள நிலையில் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்ற கவலை பல மட்டங்களிலும் உள்ளது. காவல்துறையும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

தீர்ப்புநாளின் அதிகாலையிலிருந்தே தமிழகத்தில் ரயில், பஸ் உள்பட எந்த வாகனமும் இயங்காதபடி பந்த் போல ஸ்தம்பிக்கச் செய்துவிட்டால், பெங்களூரு வரை அதன் தாக்கம் இருக்கும் என்றும் கூட மனக்கணக்குகள் போடப்பட்டுள்ள தாம்.

ad

ad