சங்க இலக்கியம் முதல் சமகாலம் வரை கவிகளால் பாடப்பெறும் காவிரி ஆற்றை, தமிழகத்தின் வரலாற்றிலிருந்து பிரித்துவிட முடியுமா? செய்துகாட்டி இருக்கிறார் கள், தமிழகத்தில் அதுவும் அரசாங்கமே!
இது மட்டுமல்ல, பதின் மூன்று மாவட்டங்களுக்கு பாசனத்துக்கும் குடிக்கவும் தண்ணீர்தரும் மேட்டூர் அணையையும் காணா மல்போக வைத்துவிட்டார் கள் எனக் குமுறுகிறார்கள், சேலம் மாவட்டத்தில்.
சமூக ஆர்வலரான தமிழரசன், ""சுமார் 16 லட்சம் எக்டேர் பரப்பில் குறுவை, சம்பா, தாளடினு மூணு போக நெல் உற்பத்திக்கு மேட்டூர் அணையிலிருந்துதான் தண்ணி வருது. வெளிநாட்டுக் காரங்க தமிழ்நாட்டின் சிறப்பையும் உண்மையான வரலாற்றையும் தெரிஞ்சுக்க தமிழக அரசின் இணையதளத்தைத் தானே பயன்படுத்துவாங்க. காவிரி ஆறு, மேட்டூர் அணை பத்திய தகவல்களைப் பதிவு செய்யாம இருப்பது, ஒரு வரலாற்றை மறைக்கிறதுக்கு சமம். மறைக்கப்பட்ட தகவல்களை உடனடியா இணையதளத்தில பதிவுசெய்யணும்''’என்றார் அழுத்தமாக.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டின பென்னி குயிக்குக்குக் நன்றிக்கடன் செலுத்த மணிமண்டபம் எழுப்புகிற தமிழக அரசு, மேட்டூர் அணையைக் கட்டச்செய்த ஆங்கிலேயப் பொறியாளர் ஸ்டான்லி யை அவமதிப்பதாக இல் லையா எனும் குரல்களும் கேட்கின்றன.
என்ன பதில் சொல்லு மோ தமிழக அரசு?