புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2014



கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்து அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற கவனத்துடன் 3 மாநகராட்சி மேயர் தேர்தல் உள்ளிட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் தமிழக மாண்புமிகுக்கள். 

செப்டம்பர் 5-ந் தேதி காலையில் அவர்களுக்கு மேலிடத் திலிருந்து திடீர்த் தகவல். எல்லோரும் சென்னைக்கு வரவேண்டும் என்ற அந்த தகவலால் அரக்கப்பரக்க அனைத்து அமைச்சர்களும் ஓடிவந்தார் கள். 

சொத்துக்குவிப்பு வழக்கில் 20-ந் தேதி தீர்ப்பு என்பதால் அது பற்றிய ஆலோ சனையா, இடைத்தேர்தல் சம்பந்தமாக புது வியூகமா அல்லது அமைச்சரவை மாற்றமா என்பது பற்றித் தெரியாததால் ஒவ்வொரு மந்திரியும் நால்வர் அணியில் உள்ள தங்களுக்கு வேண்டிய அமைச்சர்களிடம் பதற்றத்தோடு விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நால்வர் அணியே இதே பதற்றத்தில்தான் இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், விசாரித்து தகவல் சொல்கிறோம் என சமாளித்துக் கொண்டிருந்தார்கள். எதற்காக சென் னைக்கு வரச்சொன்னது மேலிடம் என்பதே வெள்ளிக்கிழமையன்று (செப்.5) மந்திரிகளின் ஆய்வுக் கூட்டத்தின் மையப் பொருளாக இருந்தது.

சமீபத்தில் ஜெ.விடம் டோஸ் வாங்கியவர்கள் யார், யார் என அமைச்சர்களுக்குள்ளேயே விவாதங் கள் நடந்தபோது, போனவாரம் செகரட்டேரியேட்டில் மாதவரம் மூர்த்தியும் தோப்பு வெங்கடாசலமும் தான் வாங்கிக் கட்டிக்கொண்டார்கள் என்பது தெரியவந்ததால் அவர்கள் தான் ஹிட் லிஸ்ட்டில் இருக்கக்கூடும் என மற்றவர்களுக்கு கொஞ்சம் பயம் விலகியது. வெள்ளி மாலையில் மாதவரம் மூர்த்தியின் மா.செ.பதவி பறிக்கப்படவே, அவருடைய மாண்பு மிகு பதவியும் அவ்வளவுதான் என மந்திரிகள் தங்களுக்குள்ளே கன்ஃபார்ம் பண்ணிக் கொண்டார்கள். எதிர்பார்த்தது போலவே, செப்டம்பர் 6-ந் தேதி சனிக்கிழமையன்று அமைச்சர் பதவியிலிருந்து மூர்த்தி நீக்கப்பட்டு, பால்வளத்துறை அமைச்சரானார் ரமணா.


ஆவின் பால் விற்பனையில் நிறைய தவறுகள் நடப்பதாகவும், அத்தகைய மோசடிகளில் மாதவரம் மூர்த்தியின் ஆட்கள் ஈடுபடுவதாகவும் உளவுத்துறை அனுப்பிய தகவலின் அடிப்படையில்தான் ஜெ. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என செய்திகள் கசிந்தபடியே இருந்தன. ஒவ் வொரு மந்திரியும் கட்சிநிதியாக இவ்வளவு தொகை தரவேண்டும் என டார்கெட் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. அதனை அவரவர் துறை யிலிருந்துதான் வசூலிக்க முடியும். அதற்கு நீக்குப்போக்கான வேலைகள் நடந்தாக வேண்டும். அப்படியிருக்கும்போது, ஆவின் முறைகேடு என்பதற்காக பால்வளத்துறை அமைச்சர் மாற்றமா என சக மந்திரி களுக்கே கேள்வி எழுந்தது. நாமும் கோட்டை வட்டாரத்தில் முழுமையாக விசாரித்தோம்.

அம்பத்தூரில் உள்ள ஒரு பெரிய நில விவகாரம் இதன் பின்னணியில் இருப்பது தெரிந்தது. புறம்போக்கு நிலத்தைப் பட்டா போட்டு விற்பனை செய்ததில் மாதவரம் மூர்த்தி தரப்பு ஆதாயம் அடைந்தது எனவும், ஆனால் இந்த டீலிங் பற்றி கட்சியின் கவனத் திற்கே கொண்டு செல்லவில்லை எனவும் அதிகாரிகள் மெல்ல காதைக் கடித் தார்கள். இது தொடர்பாகத்தான் செகரட்டேரியேட்டில் முதலில் மூர்த்தி விசாரிக்கப்பட்டு, செமத்தியாகத் திட்டு வாங்கியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து தோப்பு வெங்கடாசலம் விசாரணைக்கு அழைக்கப் பட்டிருக்கிறார்.

""நீங்க ரெவின்யூ மந்திரியா இருந்தப்பதான் இந்த புறம்போக்கு நிலத்தைப் பட்டா போட்டுக் கொடுத் திருக்கீங்க, யாரைக் கேட்டு இதைச் செய்தீங்க?'' என மேலிடம் கேட்க, ""மாதவரம் மூர்த்திதான் அவருக்கு வேண்டிய ஆளுங்கன்னு சொன்னாரு. அதனாலதான்...'' என்று இழுத்து பதில் சொல்லியிருக்கிறார் தோப்பு வெங்கடா சலம். ""என்கிட்டே சொல்லாம நீங்களாவே புறம்போக்கு நிலத்தைப் பட்டா போட்டுத் தர்ற அளவுக்கு பெரிய ஆளாயிட்டீங்களா? உங்களை இப்படி செய்யச் சொன்னவரு என்னைவிட பெரிய ஆளா?'' என ஆரம்பித்து கடுமையான வார்த்தைகளில் சரமாரியாக அர்ச்சனை நடந்திருக்கிறது. நில விவகாரத்தில் மாதவரம் மூர்த்தியுடன் சேர்ந்து தோப்பு வெங்கடாசலமும் லாபம் பார்க்காமலா இருந்திருப்பார் என்பதுதான் மேலிடத் தின் தற்போதைய சந்தேகம். 

செப்டம்பர் 6 சனிக்கிழமையன்று காலையில் ராஜ்பவனுக்கு முதல்வரின் செயலாளர் போன் செய்து, "சி.எம். சந்திப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்கிறார்' என்றதுமே மந்திரிசபை மாற்றம் நிச்சயம் என்பது அமைச்சர்கள் மத்தியில் உறுதி யாகிவிட்டது.

ஹிட்லிஸ்ட்டில் நாமும் இருப்போமோ என ஒவ் வொருவருக்குமே கிலி ஏற்பட, கடைசியில் மாதவரம் மூர்த்தி மட்டும் நீக்கப்பட்டு, ரமணா மீண்டும் மந்திரியாகிறார் என்ற தகவல் வந்ததும்தான் மற்ற மந்திரிகளுக்கு நிம்மதி ஏற்பட்டது.

ரமணாவின் இரண்டாவது மனைவி விவகாரத்தால்தான் அப்போது இவர் மீது நட வடிக்கை எடுக்கப்பட்ட தென்றும், பெண்கள் விஷயத்தில் தன் கட்சிக்காரர்கள் யாராவது துரோகம் செய்தது தெரிந்தால் ஜெ. பொறுத்துக்கொள்ளவே மாட்டார் என்றும் ரமணாவின் பதவி அப்போது பறிக்கப்பட்டபோது அமைச்சர்கள் சிலர் உணர்ச்சிப் பூர்வமாகச் சொன்னார்கள். 

மறுபடியும் எப்படி ரமணா அமைச்சரானார், அந்தத் துரோகம் சரியாயிடிச்சா? என்று அந்த அமைச்சர்களிடம் நாம் கேட்டபோது, ""இப்படியெல்லாம் கேக்கப்படாது. படாதுன்னா படாதுதான். அம்மா நினைச்சா யாரும் மந்திரியா இருக்க முடியும். அவங்க நினைச்சா யாரையும் தூக்கி எறியமுடியும். அநாவசியமா கேள்விகள் கேட்காதீங்க'' என்றார்கள் தெளிவாகவே.

ad

ad