புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2014



வெறிகொண்ட அரிவாள்களின் ஆவேசம், உயிரை அறுக்கும் மரண ஓலங்கள், தலைதெறிக்க ஓடும் பதட்ட ஓட்டங்கள், ரத்தவாடை, போலீஸ் வண்டி சைரன்கள் என சமீபகாலமாகத் தமிழகமே திகில் மாநிலமாக நிறம் மாற ஆரம்பித்திருக்கிறது. ரவுடிகளும், தாதாக்களும் கூலிப்படையினரும் ரத்த வெறியோடு, பொதுமக்களுக்கிடையே சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த வாரம், இதயத்தின் "லப்டப்'பைத் தாறுமாறாகத் துடிக்க வைத்த "திக் திக்' சம்பவம் இது. சிதம்பரம் அண்ணாமலைநகர், கலங்கு மேட்டுத் தெரு 2-ந்தேதி அதிகாலை, நல்ல தூக்கத்தில் இருந்தது.

அப்போது சரசரவென டூவீலர்கள், அந்தத் தெருவை நோக்கி அணிவகுத்து வந்தன. அதில் வந்தவர்களின் கைகளில் "பள பள' வீச்சரிவாள் கள், நாட்டு வெடிகுண்டுகள் என பயங்கர ஆயுதங் கள் இருந்தன. அந்த டெரர் படை, நேராக ஆம்புலன்ஸ் குமார் வீட்டின் முன் சைலண்ட்டாக நின்றது.


அந்த வீட்டின் முகப்பில் கல்யாணப் பந்தல் போடப்பட்டிருந்தது. மூன்று நாட் களுக்கு முன்பு, அதாவது 30-ந்தேதிதான் குமாரின் தங்கை சரஸ்வதிக்குத் திருமணம் கோலாகலமாக நடந்திருந்தது. வாழை மரம் கட்டப்பட்ட அந்தக் கல்யாணப் பந்தலின் கீழ் கல்யாணத்துக்கு வந்திருந்த உறவினர் கள் சிலர், நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

நடந்ததை பதட்டத்தோடும் கண்ணீ ரோடும் விவரிக்கத் தொடங்கினார் ஆம்புலன்ஸ் குமாரின் சகோதரி சித்ரா...

""அப்பதாங்க லேசா முழிப்பு வந்தது. கண்ணைத் திறந்து பார்த்தேன். என் தம்பி ராஜேஷ், பாத்ரூம் போறதுக்காக பின் பக்கம் போனவன்... "அய்யோ அம்மா அண்ணே... எந்திரி'ன்னு கதறியபடி பின்பக்கத்தில் இருந்து வீட்டுக்குள் ஓடிவந்தான். அவன் தலையில் வெட்டுக்காயம். ரத்தமா ஒழுகுச்சு. நான் பதறி எழறதுக்குள்ள முன்பக்கம் டமார் டுமீர்ன்னு வெடிகுண்டு வீசுற சத்தம் கேட்டது. ரெண்டு மூணு நொடிக்குள்ள ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்துச்சு.

"எங்களை எதுவும் பண்ணிறாதீங்க, விட்ருங்க'ன்னு அழுது கெஞ்சினேன். என்னையும் வீட்டுப் பொம்பளைகளையும் அடிச்சி உதைச்சி ஒரு அறைக்குள் அனுப்பி னவங்க... எங்க கண் எதிர்லயே... என் அண் ணன் குமார் தலையையும் என் தம்பி ராஜேஷ் தலையையும் தனியா அறுத்தெடுத்தானுங்க. இதை அவுங்க குழந்தைகளும் பார்த்து, திகிலடிச்சி நின்னுச்சுங்க. அவங்க ரெண்டு பேர் தலையையும் பிளாஸ்டிக் கேரி பேக்கில் போட்டுக்கிட்டு அந்தக் கும்பல் " தலைவர் மண்ரோடு சந்திரன் வாழ்க', "எங்க சகோ தரன் ஹரி வாழ்க'ன்னு ஆரவாரமா கோஷம் போட்டுக்கிட்டே போனது. ஏற்கனவே என் தம்பிகள் உயிருக்கு ஆபத்து இருக்குன்னு போலீஸுக்குத் தெரியும். அப்படி இருந்தும் சரியா நடவடிக்கை எடுக்காம விட்டுட்டாங் களே'' என்று கதறினார்.

ஆம்புலன்ஸ் குமார் மனைவி மஞ்சுளாவும், ராஜேஷ் மனைவி சுகன்யாவும், எதையும் பேச முடியாமல் தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர்.

மர்டர் டீம் வெடிகுண்டு வீசியதில், பந்தலில் உறங்கிய குமாரின் உறவினர்கள் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவ மனையில் இருக்கிறார்கள்.

கொலைக்கான மோட்டிவ் என்ன? ""ஆம்புலன்ஸ் குமா ரும் அவன் தம்பி ராஜேசும், ஏற்கனவே என்கவுன்ட்டர் செய்யப்பட்ட மணல்மேடு சங்கரின் சிஷ்யகோடிகள். அந்த கெத்தில் சிதம்பரம் அண்ணாமலை மருத்துவக் கல்லூரி முகப்பில் ஆம் புலன்ஸ்களை வாடகைக்கு விட்டு மத்தவங்களை பிழைக்க விடாம பண்ணினாங்க. குமாரின் தம்பி ராஜேஷோ, மணல் மேடு சங்கரின் எதிரியான மண்ரோடு சந்திரனின் உறவுக்காரப் பெண்ணை காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டான். இத னால் குமார் தரப்பு மேல் மண்ரோடு சந்திரன் தரப்பு ஏகக் கடுப்பில் இருந்தது. மண்ரோடு சந்திரன் ஆக்ஸிடெண்ட்டில் இறந்தபின், அவர் தம்பி ஹரி, குமாருக்கு பாடம் கத்துக் கொடுக்குறேன்னு ஒரு டீமோடக் கிளம்பிப் போக, அவனை குமார் டீம், பிடிச்சி அடிச்சி முட்டி போட வச்சி அனுப்பி வச்சிது. இதில் அவமானப்பட்ட ஹரி, சூஸைட் பண்ணிக்கிட்டான்.

இதனால் மண்ரோடு சந்திரனின் வலதுகரமா இருந்த சுரேந்தர், "ஹரி மரணத்துக்குக் காரணமான குமார் டீமை நான் பழி வாங்குறேன்'னு களமிறங்கியதோடு, மதுரை ரவுடியான மோகன் ராமைக் கூப்பிட்டு மர்டர் அசைன்மெண்ட்டைக் கொடுத்தான். குமாரால் பாதிக்கப்பட்டிருந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முன்பு சீட் வாங்கித் தரும் புரோக்கர் முருகையா, இதற்கான சகல செலவுகளையும் ஏத்துக்கிட்டார். மதுரை ரவுடி மோகன்ராம் அண்ணாமலைநகரில் ஒரு வீடு பிடிச்சி, குமாரையும் ராஜேசையும் கொல்ல, டிபன்பாக்ஸ் வெடிகுண்டுகளை ரெடிபண்ணத் தொடங்கினான். இந்த நிலையில், ஐ.ஜி.இன்டலிஜென்ட் அலுவலகத்திலிருந்து ஒரு ரிப்போர்ட், எஸ்.பி.ராதிகாவுக்கு வந்தது. அதில் "ஆம்புலன்ஸ் குமாரை மண்ரோடு சந்திரன் தரப்பைச் சேர்ந்த சுரேந்தர் குறிவைத்து மூவ் பண்ணிக் கொண்டிருக்கிறான்' என்று இருந்தது. இதை காவல்துறை கண்டுகொள்ளவில்லை. இந்த நேரத்தில் 3.5.2014-ல் வெடிகுண்டு தயாரித்த மோகன்ராம், தயாரிப்பு பிராஸசிங்கின் போது அந்த குண்டு வெடிக்க, பலத்த காயமடைந்தான். இவனை மருத்துவ சிகிச்சை கொடுத்து சிறைக்கு அனுப்பிய போலீஸ், சுரேந்தரை சரண்டராக வைத்தது. அப்போது, சுரேந்தர் "இதுவரை 9 தலித் தலைகளை எடுத்திருக்கிறோம். 10-வது தலையாக ஆம்புலன்ஸ் குமாரை வைத்திருந்தோம். அதற்குள் குண்டுவெடித்து அவன் தப்பிவிட்டான். 11-வது தலை திருவாரூர் பாலு' என பட்டியல் போட, போலீஸ் இந்த வாக்குமூலத்தை மறைத்து அவனை சிறைக்கு அனுப்பியது. பல்கலைக்கழக சீட் வசூல் தொடர்பான மோதல் என அப்போது கதையை முடித்துவிட்டார்கள்'' என நம்மிடம் பின்னணி முழுதையும் விவரித்த அந்த உளவு அதிகாரி,

""உளவுப்பிரிவின் அறிக்கையின் அடிப்படை யில் தீவிரமாக நடவடிக்கை எடுத்திருந்தால், டிபன் பாக்ஸ் குண்டு வெடித்ததை தடுத்திருக்கலாம். அதன் தொடர்ச்சியாய் இப்போது நடந்த டபுள் மர்டரையும் தடுத்திருக்கலாம். இன்னொன்று குமார், ராஜேஷ் படுகொலைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, கடலூர் மத்திய சிறையில் சுரேந்தர் வைத்திருந்த செல்ஃபோனை பறிமுதல் செய்திருக்கிறார்கள். அதிலிருந்த எண்களை ட்ரேஸ் பண்ணியிருந்தாலும் மர்டர்கள் நடந் திருக்காது. ஆனா எல்லாத்துலயும் போலீஸ் அசட்டையாவே இருக்கு. 

இந்த சிதம்பரம் ரெட்டை மர்டரில், 20 பேருக்கும் மேல், சம்பந்தப்பட்டிருக்காங்க. ஆனா சென்னை ஹைகோர்ட் வழக்கறிஞர் ஒருத்தர் மூலம் சிதம்பரம் ஆளும் கட்சி வழக்கறிஞர் வழியா 4 பேர் சரண்டர் ஆகியிருக்காங்க. இதன்படி பெண் இன்ஸ்பெக் டர் மீனா, சீர்காழி பைபாஸ் ரோட்டில் ஒரு மூலிகைக்கடை அருகே ஜீப்பில் காத்திருந்தார். அப்ப கஜேந்திரன் (தலித்), பட்டாபி (வன்னியர்) பத்தாயிரம் (யாதவர்), சிவமணி (நாடார்) ஆகியோரைக் கொண்டுவந்து அவரிடம் ஒப்படைச்சாங்க. மற்ற குற்றவாளிகளைத் தப்ப வைக்க வேலைகள் நடக்குது.  இரண்டு சமூகங்களுக்கு இடையிலான மோதல்தான் இப்ப இரட்டை மர்டர் வரை வந்து நிற்குது'' என்று திகைக்க வைத்தார்.
தமிழகத்தின் "திக்... திக்' நிலவரம் மக்களை பய முறுத்திக்கொண்டிருக்கிறது.

ad

ad