புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2014

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்காது
லங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது, இந்திய பிரதிநிதி இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போர் குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்திய பிரதிநிதி அறிவித்துள்ளார்.

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பாக உள்ளக ரீதியான விசாரணைகளே நடத்தப்பட வேண்டும் என்றும், அந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் இந்திய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

கடந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தின் அடிப்படையில் புதிய ஆணையாளர் செயட் அல் ஹூசெய்ன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய பிரதிநிதி கோரியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad