புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2014


யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகள்: ஜெனீவா உப மாநாட்டினை தவிர்த்த இலங்கை
ஜெனீவா - ஐ.நா மனித உரிமைச்பையின் 27வது கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில், மனித உரிமை சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகளெனும் தொனிப்பொருளிலான உபமாநாட்டினை, இலங்கை தவிர்த்துக்கொண்டுள்ளது.
பெண்களின் உரிமைகள் தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின் சிறப்பு பிரதிநிதி பங்கெடுத்திருந்த இந்த உபமாநாட்டில், மோதல் காலங்களிலும் மோதலுக்கு பின்னரான காலத்திலும், பெண்கள் எதிர்கொள்கின்ற பாலியல் வன்முறைகளை தடுப்பது குறித்தும், இதற்கான பரிகாரநீதி குறித்தும் இந்த உபமாநாட்டில் கருத்தாடப்பட்டிருந்தது.
அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, பிறேசில், இத்தாலி உட்பட பல ஆபிரிக்க, ஆசிய நாடுகள் பங்கெடுத்திருந்த போதிலும் இந்த உபமாநாட்டிற்கு இலங்கை சமூகமளிக்கவில்லை.
இலங்கைத்தீவில் இடம்பெற்றிருந்த போரின் போது, தமிழ்பெண்கள் எதிர்கொண்ட பாலியல் வன்முறைகள், போருக்கு பிந்திய சமாகாலத்தில் கணவனை இழந்த மற்றும் ஆண்துணையற்ற பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் எதிர்கொள்கின்ற பாலியல் அச்சுறுத்தல்கள் ஆகிய தொடர்பில் சிறிலங்கா படையினர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது.
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாக சியறா லியோனில் இடம்பெற்றிந்த போரின் போது, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பில், ஐ.நா மனித உரிமைச்சபையின் பெண்கள் உரிமைகள் விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதியின் விசாரணை அறிக்கை, இந்த உபமாநாட்டில் முக்கியவும் பெற்றிருந்தது.
போர்ச்சூழலில் பெண்கள் மீது இடம்பெறுகின்ற பாலியல் வன்முறைகள் போர்குற்றங்களாகவும், மானிடத்துக்கு எதிரான குற்றங்களாகவும் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இலங்கை இவ் உபமாநாட்டினை தவிர்த்து பங்கேற்கவில்லை.
இலங்கையில் யுத்தத்தின் விளைவாக சுமார் 90,000 தமிழ் கைம்பெண்கள் வாழ்ந்து வருவதோடு, பாலியல் வன்முறைகள் அச்சுறுத்தல் என பெண்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு வகையிலான மனித உரிமைமீறல்களில் இருந்து பெண்களின் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்த 'பாதுகாப்புப் பொறிமுறை' ஒன்றை உடனடியாக உருவாக்கி செயற்படவைக்க ஆவன செய்யுமாறும் நா.தஅரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் சர்வதேச விதவைகள் நாளில் அனைத்துலக சமூகத்திடம் கோரிநின்றிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

ad

ad