புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2014


தமிழக முதல்வர் சொத்துக் கொவிப்பு -தீர்ப்புக்கு இன்னும் 10 நாட்களே. மினி தொடர் 

1.பிப்ரவரி 5 ஆம் தேதி...
ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமார், ‘கோர்ட்டில் மார்க் செய்யாத 149 நினைவு பரிசுப் பொருட்களை எடுத்துச்சென்றுவிட்டார்கள். அதைத் திருப்பித்தர வேண்டும்’ என தாக்கல் செய்த மனுவும், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் தரப்பில், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஜெ தரப்பு வழக்கறிஞர் குமார் தாக்கல் செய்திருந்த மனு மீது பதிலளித்த
நீதிபதி குன்ஹா, ‘‘சாட்சியங்கள் அனைத்தும் விசாரித்து முடிந்துவிட்டது. வழக்கறிஞர்களின் வாதங்களும் முடிந்துவிட்டன. இந்த வழக்கில் நீதிபதி மட்டும்தான் மாற்றப்பட்டிருக்கிறார். அதனால், இறுதித் தீர்ப்பு முடிந்தவுடன் முறைப்படி பெட்டிஷன் போட்டு அந்த  நினைவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்’’ என்று அந்த மனுவை தள்ளுபடி செய்தார். நன்றி விகடன்

மெடோ அக்ரோ ஃபார்ம் நிறுவன இயக்குநர் சண்முகம் மற்றும் ரிசர்வே அக்ரோ கம்பெனி இயக்குநர் குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். மெடோ அக்ரோ ஃபார்ம் வழக்கறிஞர் தியாகராஜன், ‘‘எங்களுக்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தச் சொத்துகளை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி சென்னை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது. அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதா பங்குதாரர் மட்டுமே; உரிமையாளர் கிடையாது. எனவே, அந்த மனு மீதான தீர்ப்பு வரும் வரை, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்றார்.

இந்த வழக்கு 15 ஆம் தேதிக்கு  ஒத்தி வைக்கப்பட்டது. 

பிப்ரவரி 6 ஆம் தேதி...
அன்பழகன் தரப்பு வழக்கறிஞரும், தர்மபுரி எம்.பி-யுமான தாமரைச்செல்வன், ‘பாஸ்கரன் இறந்ததை மறைத்து உள்நோக்கத்தோடு அரசு வழக்கறிஞர் பவானிசிங் மனு தாக்கல் செய்திருக்கிறார்’ என்று தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் பவானிசிங் பதில்மனு தாக்கல் செய்திருந்தார் அதில், ‘‘நான் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகச் சொல்வது தவறானது. பாஸ்கரன் இறப்பு பற்றி தெரியவில்லை’’ என்று கூறியிருந்தார்.

ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமாரும் பதில்மனு தாக்கல் செய்தார் அதில், ‘‘இந்த வழக்கின் மூன்றாம் நபரான அன்பழகனுக்கு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி குன்ஹா நான்கு உத்தரவுகளை பிறப்பித்தார்.

1. லஞ்ச ஒழிப்புத் துறையினர் பாஸ்கரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதை விசாரித்து 15 ஆம் தேதிக்குள் கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
2. கைப்பற்றப்பட்ட வெள்ளிப் பொருட்களின் மஹஜர் பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும்.
3. பாஸ்கரன் வசம் உள்ள வெள்ளிப் பொருட்கள் பற்றிய சோதனைப் பட்டியல் விவரத்தையும் அறிவிக்க வேண்டும்.
4. ஜெயலலிதாவின் வீடு போயஸ்கார்டனில் வெள்ளிப் பொருட்களின் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அலமாரி சாவி யாரிடம் இருக்கிறது என்று தெரியப்படுத்த வேண்டும்’’ என்றார்.

பிப்ரவரி 15 ஆம் தேதி...
வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிப் பொருள்களை வைத்திருந்த ஜெயலலிதாவின் செயலாளரும்சட்ட ஆலோசகருமாக இருந்த பாஸ்கரன் குறித்த அறிக்கையை டி.எஸ்.பி சம்பந்தம் தாக்கல் செய்தார். அதில், ‘சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூர் வட்டாட்சியரால் பாஸ்கரனின் இருப்பிடத்தை உறுதிசெய்ய முடியவில்லை. சென்னை மாநகராட்சியில் பாஸ்கரன் மரணம் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அவர் மரணம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கான சான்றிதழைப் பெற இயலவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைக் கடுமையாக ஆட்சேபித்த அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் பவானிசிங், ‘‘பாஸ்கரன் உயிரோடு இல்லை என்று தமிழக ஊழல் தடுப்புத் துறை இயக்ககம் கூறுவதை நம்ப மாட்டேன். பாஸ்கரன் உயிரோடு இருக்கிறார் என்பதே என் கருத்து’’ என்றார்.

தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகனின் வழக்கறிஞரான தாமரைச்செல்வன், ‘‘2013, டிசம்பர் 2 ஆம் தேதி பாஸ்கரன் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் இறந்தார். அதற்கான இறப்புச் சான்றிதழ் வேலூர் மாநகராட்சியில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி பெறப்பட்டுள்ளது" என்று கூறி, அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பிப்ரவரி 28... 
‘ஜெயலலிதாவின் சட்ட ஆலோசகர் பாஸ்கரன் எடுத்துச் சென்ற 1,116 கிலோ வெள்ளிப் பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்' என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி குன்ஹா.

அதோடு, மார்ச் 7 ஆம் தேதி முதல் வழக்கின் இறுதி வாதத்தைத் தொடங்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
3.வெள்ளி நகைகள் எங்கே?

‘‘இந்த வழக்கின் எதிர் மனுதாரரான ஜெயலலிதாவின் அசையும் சொத்துகள் அனைத்தும் இந்தநீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அதைப் பார்த்து தீர்ப்பு வழங்குவதுதான் முறையாக இருக்கும்’’ என்று டிசம்பர் 12 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொன்னார். அதனை அடுத்து மீண்டும் வழக்கு டிசம்பர் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, ‘‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் சென்னையில் இருந்து பெங்களூரு கொண்டுவந்துவிட்டோம். அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இனி வழக்கின் இறுதிக்கட்ட வாதத்தைத் தொடரலாமா?’’ என அரசு வழக்கறிஞர் பவானிசிங்கைப் பார்த்துக் கேட்டார்.

அதற்கு அரசு வழக்கறிஞர் பவானிசிங் அமைதியாக இருந்தார். இதைத் தொடர்ந்து ஜெ. தரப்பு வழக்கறிஞர் மணிசங்கர், ‘‘கொண்டுவரப்பட்ட சொத்துகள் பற்றிய விவரப் பட்டியல் வேண்டும்’’ என்றார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி குன்ஹா, ‘‘கோர்ட் ஆவணங்களில் உள்ள சொத்துக்கள்தான் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அந்த விவரப்பட்டியல் அனைவரிடமும் இருக்கிறது. அதனால் அந்த பட்டியலை கொடுக்க வேண்டியது இல்லை’’ என்றார்.

அதையடுத்து, ‘‘எங்களுக்கு சில சொந்த வேலைகள் இருப்பதால், வழக்கை ஒரு வார காலம் தள்ளிப்போட வேண்டும்’’ என்றார் மணிசங்கர். அதற்கு சம்மதம் தெரிவித்து நீதிபதி குன்ஹா, ‘‘வழக்கை ஒத்திவைக்கிறேன்’’ என்றார். வழக்கு விசாரணையின்போது ஜெ. தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

3.2.2014 அன்று கோர்ட் கூடியது.

நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா வந்ததும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி நான்கு பேரும் ஆஜராகாததற்கு விலக்குக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்காததால் நீதிபதி அந்த மனுவை ஏற்றுக்கொண்டார்.

அரசு வழக்கறிஞர் பவானிசிங் நீதிபதியிடம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.55 லட்சத்து 80,000 மதிப்புள்ள 1,116 கிலோ வெள்ளி பொருட்களை, ஜெயலலிதாவின் ஆலோசகரான சென்னை கொட்டிவாக்கம் கற்பகம்பாள் நகரைச் சேர்ந்த பாஸ்கரன், சென்னை நீதிமன்றத்தில் இருந்து பெற்றுச் சென்றார். நீதிமன்றம் கேட்கும்போது அந்தப் பொருட்களை ஒப்படைப்பதாகக் கூறியிருந்தார். இந்தப் பொருட்களை பெங்களூரு கோர்ட்டில் ஒப்படைக்க அவருக்கு உத்தரவிட வேண்டும். அந்த நகைகளை, அரசு தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்ட வாசுதேவன் என்ற நகை மதிப்பீட்டாளரைக் கொண்டு நீதிமன்றத்தில் குறியீடு செய்ய வேண்டும்’’ என்றார்.

ஜெ தரப்பு வழக்கறிஞர் குமார் கடும் ஆட்சேபணைத் தெரிவித்து, ‘‘இந்த மனு மீது பதிலளிக்க 10 நாட்கள் அவகாசம் வேண்டும்’’ என்றார்.

நீதிபதி குன்ஹா, ‘‘இந்த வழக்கை விசாரிக்க நான் சம்பளம் வாங்குகிறேன். இது மக்களின் பணம். வழக்கை இழுத்தடித்து காலதாமதம் செய்ய என் மனசாட்சி இடம் அளிக்கவில்லை. இந்த வழக்கு 17 ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தினமும் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், ‘கோர்ட்டில் மார்க் செய்யாத 149 நினைவு பரிசுப் பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டார்கள். அதைத் திருப்பித்தர வேண்டும்’ என்று ஒரு மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் இயக்குநர் சண்முகம் சார்பில், அவரின் வழக்கறிஞர் தியாகராஜன், இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுகள் மீதான விசாரணையை 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

பிப்ரவரி 5 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தி.மு.க-வின் பேராசிரியர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞரும் தர்மபுரி தொகுதி எம்.பி-யுமான தாமரைசெல்வன், ஒரு புதிய மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘அரசு வழக்கறிஞர் பவானி சிங் பிப்ரவரி 3 ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில் 1,116 கிலோவெள்ளி பொருட்கள் ஜெயலலிதாவின் ஆலோசகர் பாஸ்கரன் என்பவரிடம் உள்ளதாகவும், அதை நீதிமன்றத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவில் குறிப்பிட்டுள்ள பாஸ்கரன் என்பவர் கடந்த 2013 டிசம்பர் 3 ஆம் தேதி இறந்துவிட்டார். அந்த செய்தி தினசரி நாளேடுகளில் வந்திருக்கிறது (அதற்கான ஆதாரத்தையும் இணைத்திருந்தார்). இந்த விவரம் தெரிந்தும் வேண்டும் என்றே உண்மையை மறைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, இந்த வழக்கை இதற்கு முன் விசாரணை நடத்திய நீதிபதி பாலகிருஷ்ணா முன் ஆகஸ்ட் 23 முதல் 26 ஆம் தேதி வரை அரசு வழக்கறிஞர் பவானிசிங் வாதம் செய்தார். அப்போது பாஸ்கரன் உயிருடன் இருந்தார். அப்போது வெள்ளிப் பொருட்களை கொண்டுவர வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் ஏன் மனு தாக்கல் செய்யவில்லை. பாஸ்கரன் இறந்துபோன தகவல் அரசு வழக்கறிஞருக்கு எப்படி தெரியாமல் போனது?

நீதிபதி பாலகிருஷ்ணா முன் நான்கு நாட்கள் வாதம் செய்த அரசு வழக்கறிஞர், வழக்கு தொடர்பான ஆவணங்களை படிக்காமலும் முழுமையாக தெரிந்துகொள்ளாமலும் வாதம் செய்தாரா அல்லது வழக்கை தாமதப்படுத்தும் உள்நோக்கத்தில் செயல்படுகிறாரா என்று சந்தேகம் வருகிறது.

ஆகவே, வெள்ளிப் பொருட்களை கொண்டுவர வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது நீதிமன்றத்துக்கு உகந்ததாகக் கருதப்படும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

நீதிபதி குன்ஹா அரசு வழக்கறிஞரைப் பார்த்து, ‘‘இதற்கு என்ன சொல்கிறீர்கள்’’ என்றார்.

அரசு வழக்கறிஞர் பவானிசிங், ‘‘எனக்கு முழு விவரம் தெரியாது. தகவல் பெற்று தெரிவிக்கிறேன்’’ என்றார்.

நீதிபதி குன்ஹா: ‘‘இந்த மனு மீதான ஆட்சேபணையை 6 ஆம் தேதிக்கு தாக்கல் செய்யலாம்’’ என்று அரசு மற்றும் ஜெ தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
4.பாஸ்கரன் உயிரோடு இருக்கிறாரா? 


பிப்ரவரி 5 ஆம் தேதி...
ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமார், ‘கோர்ட்டில் மார்க் செய்யாத 149 நினைவு பரிசுப் பொருட்களை எடுத்துச்சென்றுவிட்டார்கள். அதைத் திருப்பித்தர வேண்டும்’ என தாக்கல் செய்த மனுவும், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் தரப்பில், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஜெ தரப்பு வழக்கறிஞர் குமார் தாக்கல் செய்திருந்த மனு மீது பதிலளித்த நீதிபதி குன்ஹா, ‘‘சாட்சியங்கள் அனைத்தும் விசாரித்து முடிந்துவிட்டது. வழக்கறிஞர்களின் வாதங்களும் முடிந்துவிட்டன. இந்த வழக்கில் நீதிபதி மட்டும்தான் மாற்றப்பட்டிருக்கிறார். அதனால், இறுதித் தீர்ப்பு முடிந்தவுடன் முறைப்படி பெட்டிஷன் போட்டு அந்த  நினைவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்’’ என்று அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

மெடோ அக்ரோ ஃபார்ம் நிறுவன இயக்குநர் சண்முகம் மற்றும் ரிசர்வே அக்ரோ கம்பெனி இயக்குநர் குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். மெடோ அக்ரோ ஃபார்ம் வழக்கறிஞர் தியாகராஜன், ‘‘எங்களுக்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தச் சொத்துகளை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி சென்னை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது. அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதா பங்குதாரர் மட்டுமே; உரிமையாளர் கிடையாது. எனவே, அந்த மனு மீதான தீர்ப்பு வரும் வரை, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்றார்.

இந்த வழக்கு 15 ஆம் தேதிக்கு  ஒத்தி வைக்கப்பட்டது. 

பிப்ரவரி 6 ஆம் தேதி...
அன்பழகன் தரப்பு வழக்கறிஞரும், தர்மபுரி எம்.பி-யுமான தாமரைச்செல்வன், ‘பாஸ்கரன் இறந்ததை மறைத்து உள்நோக்கத்தோடு அரசு வழக்கறிஞர் பவானிசிங் மனு தாக்கல் செய்திருக்கிறார்’ என்று தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் பவானிசிங் பதில்மனு தாக்கல் செய்திருந்தார் அதில், ‘‘நான் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகச் சொல்வது தவறானது. பாஸ்கரன் இறப்பு பற்றி தெரியவில்லை’’ என்று கூறியிருந்தார்.

ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமாரும் பதில்மனு தாக்கல் செய்தார் அதில், ‘‘இந்த வழக்கின் மூன்றாம் நபரான அன்பழகனுக்கு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி குன்ஹா நான்கு உத்தரவுகளை பிறப்பித்தார்.

1. லஞ்ச ஒழிப்புத் துறையினர் பாஸ்கரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதை விசாரித்து 15 ஆம் தேதிக்குள் கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
2. கைப்பற்றப்பட்ட வெள்ளிப் பொருட்களின் மஹஜர் பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும்.
3. பாஸ்கரன் வசம் உள்ள வெள்ளிப் பொருட்கள் பற்றிய சோதனைப் பட்டியல் விவரத்தையும் அறிவிக்க வேண்டும்.
4. ஜெயலலிதாவின் வீடு போயஸ்கார்டனில் வெள்ளிப் பொருட்களின் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அலமாரி சாவி யாரிடம் இருக்கிறது என்று தெரியப்படுத்த வேண்டும்’’ என்றார்.

பிப்ரவரி 15 ஆம் தேதி...
வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிப் பொருள்களை வைத்திருந்த ஜெயலலிதாவின் செயலாளரும்சட்ட ஆலோசகருமாக இருந்த பாஸ்கரன் குறித்த அறிக்கையை டி.எஸ்.பி சம்பந்தம் தாக்கல் செய்தார். அதில், ‘சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூர் வட்டாட்சியரால் பாஸ்கரனின் இருப்பிடத்தை உறுதிசெய்ய முடியவில்லை. சென்னை மாநகராட்சியில் பாஸ்கரன் மரணம் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அவர் மரணம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கான சான்றிதழைப் பெற இயலவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைக் கடுமையாக ஆட்சேபித்த அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் பவானிசிங், ‘‘பாஸ்கரன் உயிரோடு இல்லை என்று தமிழக ஊழல் தடுப்புத் துறை இயக்ககம் கூறுவதை நம்ப மாட்டேன். பாஸ்கரன் உயிரோடு இருக்கிறார் என்பதே என் கருத்து’’ என்றார்.

தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகனின் வழக்கறிஞரான தாமரைச்செல்வன், ‘‘2013, டிசம்பர் 2 ஆம் தேதி பாஸ்கரன் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் இறந்தார். அதற்கான இறப்புச் சான்றிதழ் வேலூர் மாநகராட்சியில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி பெறப்பட்டுள்ளது" என்று கூறி, அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பிப்ரவரி 28... 
‘ஜெயலலிதாவின் சட்ட ஆலோசகர் பாஸ்கரன் எடுத்துச் சென்ற 1,116 கிலோ வெள்ளிப் பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்' என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி குன்ஹா.

அதோடு, மார்ச் 7 ஆம் தேதி முதல் வழக்கின் இறுதி வாதத்தைத் தொடங்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
5.ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜெயலலிதா கொடுத்த வெள்ளித்தட்டு!
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதத்தில் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் சில சுவாரஸ்ய காட்சிகள்...
வருமான வரித்துறை அதிகாரிகள் சீனிவாசன்,சீத்தராமன்,செல்வராஜ் ஆகியோர் அளித்துள்ள சாட்சியங்களைப் படித்து காட்டினார் பவானிசிங்.அதில், 1988 முதல் 1993 ஆண்டு வரை ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டடம், நிலம், திராட்சைத் தோட்டம், பண்ணை வீடு உள்பட பல வழிகள் வந்த வருமானம், செலவு, கடன் உள்பட அனைத்து விவரங்களையும் கொண்ட வருமான வரி ஆவணங்களைத் தாக்கல் செய்ததுடன், அவரது சொத்துகளுக்கான சொத்துவரி, வருமானவரி செலுத்திய விவரங்கள் இருப்பதைப் படித்துக் காட்டினார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அளித்துள்ள சாட்சியத்தையும் படித்துக்காட்டினார் பவானிசிங்.
'தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் அழைப்பின் பேரில் தலைமைச் செயலகத்தில் அவரைச் சந்தித்துப் பேசினேன். அப்போது ‘6.9.1995 அன்று வி.என்.சுதாகரன் திருமணம் நடக்கிறது; அதில் இசை நிகழ்ச்சி நடத்திக்கொடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.
அவரின் விருப்பத்தை ஏற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளில் இரவு 9.45 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை என்னுடன் சேர்ந்து 25-க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சி நடத்திக் கொடுத்தோம்.அதற்கு அன்பளிப்பாக எனக்கு வெள்ளித்தட்டு, வெள்ளி குங்குமச்சிமிழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நான் கட்டணம் எதுவும் வாங்கவில்லை.தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் தமிழ் திரையுலகின் மூத்த கலைஞராக இருந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குடும்பத் திருமணம் என்பதால் கட்டணம் வாங்கவில்லை' என்று கூறியிருந்ததை படித்துக் காட்டினார்.
தஞ்சை மாவட்ட துணைப்பதிவாளர் கோவிந்தராஜ் கொடுத்துள்ள சாட்சியத்தில், 'சோமசுந்தரம் என்பவரின் மனைவி முத்துலட்சுமி பெயரில் இருந்த நான்கு சொத்துகள் முறையே ரூ.1,29,400, ரூ.1,39,000, ரூ.1,02,000 மற்றும் ரூ.1,20,000 என்ற மதிப்புடைய சொத்துகளை சசி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் 31.7.1995 அன்று பதிவுசெய்தோம்'என்று அளித்துள்ள சாட்சியத்தை படித்துக் காட்டினார்.
தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் மூத்த எலெக்ட்ரிக் இன்ஜினியர் திருத்துவராஜ் அளித்துள்ள சாட்சியத்தில், ‘எனது மேலதிகாரி தங்கவேலின் உத்தரவின் பேரில் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சிறுதாவூர் பண்ணைத் தோட்டம், பையனூர் பங்களா, ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் மற்றும் வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் ஆகிய கட்டடங்களில் மேற்கொண்டுள்ள எலெக்ட்ரிக்கல் பொருட்களை மதிப்பீடு செய்தோம். அதில் சிறுதாவூர் பண்ணைத் தோட்டத்தில் ரூ.17,50,000, பையனூர் பங்களாவில் ரூ.31,13189, ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் நிறுவனத்தில் ரூ.47,75,000, போயஸ் கார்டன் வீட்டில் ரூ.1,05,25,000 என்று மதிப்பீடு செய்து அறிக்கை கொடுத்தோம்’ என்ற சாட்சியத்தைப் படித்துக் காட்டினார்.
கோவை ராமநாதன் என்ற சார்பதிவாளர் அளித்துள்ள சாட்சியத்தில், ‘சசி என்டர்பிரைசஸ் மற்றும் கிரீன்ஃபார்ம் ஹவுஸ் ஆகிய நிறுவனங்களுக்காக 15 விவசாயிகளிடம் இருந்து நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கி பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த நிலங்களை அப்போதைய மார்க்கெட் விலையை காட்டிலும் குறைவாக விலைக்கு வாங்கியுள்ளனர். நிலம் பதிவு செய்வதற்கான முத்திரை மற்றும் பதிவு கட்டணமும் குறைத்து செலுத்தப்பட்டுள்ளது’ என்று சொல்லியிருப்பதைப் படித்துக் காட்டினார்.
தியாகராஜசுவாமி என்ற சமையல்காரர் கொடுத்துள்ள சாட்சியத்தில், வி.என்.சுதாகரன் திருமணத்துக்கு சமையல் செய்ததற்காக ரூ 11 ஆயிரம் கட்டணத் தொகையை காசோலை மூலம் பெற்றதை, படித்துக் காட்டினார். அதையடுத்து, மெடோ அக்ரோ ஃபார்ம் நிறுவனத்துக்கு நிலம் வாங்கிக் கொடுத்தது தொடர்பான சாட்சியம அளித்திருந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் கண்ணன் மற்றும் கணேசன் ஆகியோரிடம் பவானிசிங் குறுக்கு விசாரணை நடத்தினார். "குற்றவாளிகளைக் காப்பாற்ற நீங்கள் பொய்யான தகவல் தெரிவித்திருக்கிறீர்கள்" என்றார்.
அதை கண்ணனும் கணேசனும் மறுத்தார்கள்.
வழக்கு விசாரணை தொடங்கியதும் லெக்ஸ் பிராபர்ட்டீஸ் கம்பெனி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குலசேகரன்,"இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எங்கள் நிறுவனங்களை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்பது நியாயமான கோரிக்கை.எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்ல வாய்ப்பு கொடுக்க வேண்டும்" என்று மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான கோரிக்கைக்கு பதிலளித்த நீதிபதி குன்ஹா,"இந்த வழக்கு 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது.உங்கள் கம்பெனிகளை இடையில் சேர்க்கவில்லை.வழக்கு பதிவுசெய்த காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.அப்போதே கம்பெனியை விடுவிக்க வேண்டும் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை. சென்னையில் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது தூங்கிக்கொண்டிருந்தீர்களா? இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் முடிகிறது.எனக்கு முன் ஏழு நீதிபதிகள் வழக்கை விசாரணை நடத்தியுள்ளனர்.
ஏற்கெனவே அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு சாட்சியங்கள் விசாரணை முடிந்து, வழக்கறிஞர்கள் வாதமும் முடிந்துள்ளது.மீண்டும் வழக்கறிஞர்கள் வாதம் தொடங்கியுள்ளது.அப்போதெல்லாம் ஏன் கம்பெனியை விடுவிக்க வேண்டும் என்று கேட்கவில்லை.விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோது, மனு தாக்கல் செய்திருப்பதன் உள்நோக்கம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை பார்த்து," என்ன சொல்கிறீர்கள்?" என்றார். அதற்கு பவானிசிங்,"இது தொடர்பாக நான் ஏற்கெனவே பதில்மனு தாக்கல் செய்துள்ளேன். அதில் கம்பெனிகள் அனைத்தும் குற்றவாளிகளின் சொத்துப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், அதை விடுவிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.
அதைக் கேட்டு அந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி குன்ஹா.
6.ஜெயலலிதாவின் 306 சொத்து பட்டியல்!
மே 9 ஆம் தேதி அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும், அவரது ஜூனியர் மராடியும் நீதிபதி முன்பு ஜெயலலிதாவின் 306 சொத்துகளின் பட்டியலை மாறி மாறி வாசித்து முடித்தபோது, அத்தனை பரபரப்பு.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பின் இறுதி வாதம் 15வது நாளாக கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. சரியாக 10.30 மணிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இருக்கையில் அமர்ந்தார்.
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், அசோகன், பன்னீர்செல்வம் ஆகியோர் ஆஜரானார்கள். தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர்கள் சரவணன், நடேசன், பாலாஜி சிங், குமரேசன் ஆகியோர் ஆஜராகினர். குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வழக்கம்போல் ஆஜராகவில்லை.

அரசு வழக்கறிஞர் பவானி சிங், ''1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, முறைகேடாக யார் யாரிடம் எப்படியெல்லாம் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார் என்பதை இங்கு 2,500 பக்க சாட்சியங்கள் அடங்கிய ஆவணத்தோடு தெரிவிக்கிறேன்.
இந்த வழக்கு தொடங்குவதற்கு முன்பு குற்றவாளிகள் தரப்பில் 17 சொத்துகள் மட்டுமே இருந்தன. இந்த வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் 306 சொத்துகள் அதிகரித்துள்ளன. அதில் 286 சொத்துகள் பல வழிகளில் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டவை. இந்த வழக்கு காலத்துக்கு முன்பு இவர்களின் பொருளாதார நிலையும், வழக்கு நடைபெற்ற காலத்தில் இவர்களின் பொருளாதார நிலையும் சம்பந்தம் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது" என்று கூறி ஜெயலலிதா தரப்பின் சொத்துப் பட்டியலை காலை 10.30க்கு வாசிக்கத் தொடங்கினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வாசிக்கத் தொடங்கியவர்கள், மாலை 4.15 மணிக்கு முடித்தனர்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாசித்த ஜெயலலிதாவின் 306 சொத்துப் பட்டியல் இதுதான்...

''இந்த வழக்கின் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயர்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவர்கள் பங்குதாரர்களாக இருந்து தொடங்கிய ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ்.ப்ராப்பர்ட்டீஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்‌ஷன், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் பிரைவேட் லிமிடெட் என 32 கம்பெனிகள் பெயரிலும் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.

போயஸ் கார்டன் நிலம் மற்றும் கட்டடம் 10 கிரவுண்ட் 330 சதுர அடி விலை ரூ.1,32,009, ஹைதராபாத் சிட்டியில் பிளாட் நம்பர் 36ல் விரிவாக்கப்பட்ட 651.18 சதுர அடி கட்டடம் ரூ.50,000, ஹைதராபாத் பஷீராபாத் என்ற கிராமத்தில் திராட்சைத் தோட்டம் மற்றும் இரண்டு பண்ணை வீடுகள், வேலையாட்களுக்கான குவாட்டர்ஸ் உள்ளிட்ட 11.35 ஏக்கர் நிலம் ரூ.1,65,058. மேலும், அதே பகுதியில் 93/3 சர்வே எண்ணில் 3.15 ஏக்கர் ரூ.13,254 ஆகியவை சந்தியா மற்றும் ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா பெயரில் வட சென்னையில் சேயார் கிராமத்தில் விவசாய நிலம் வேதாசல முதலியார் மகன் நடேச முதலியாரிடம் 3.43 ஏக்கர் நிலம் ரூ.17,060, ஜெயலலிதா சசிகலா பெயரில் சென்னை-28, சீனிவாச அவின்யூ நிலம் மற்றும் வீடு 1,897 சதுர அடி வெங்கட சுப்பனிடம் இருந்து ரூ.5,70,039 வாங்கியது. சசிகலா பெயரில் சாந்தோம் ஆர்.ஆர். ஃப்ளாட் ரூ.3,13,530, சசி என்டர்பிரைசஸ் பெயரில் சென்னை-4, அப்பாஸ் அலிகான் ரோட்டில் ரூ.98.904க்கு ஷாப்பிங் மால், நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் ரோட்டில் 11 கிரவுண்ட் 736 சதுர அடி நிலம் ரூ.22,10,919, மவுண்ட் ரோடு, மயிலாப்பூரில் ஜெயலலிதா பெயரில் வாங்கிய நிலம் மற்றும் கடை ரூ.1,05409.
தஞ்சாவூர் மானம்புசாவடியில் 2,400 சதுர அடியில் நிலம் மற்றும் வீடு ரூ.1,57,125, அதே பகுதியில் 51,000 சதுர அடி காலி நிலம் ரூ.1,15,315, மீண்டும் அதே பகுதியில் காலி நிலம் ரூ.2,02,778 ஆகியவை சசி என்டர்பிரைசஸ் வாங்கியது.

சசிகலா பெயரில் திருச்சி அபிராமிபுரத்தில் நிலம் மற்றும் வீடு 3,525 சதுர அடி ரூ.5,85,420, ஜெயா பப்ளிகேஷன் பெயரில் கிண்டி தொழிற்பேட்டை நிலம் மற்றும் ஷெட் ரூ.5,28,039, புதுக்கோட்டை 1 கிரவுண்ட் 1,407 சதுர அடி நிலம் மற்றும் கட்டடம் ரூ.10,20,371க்கும், டான்சி நிலம் 55 கிரவுண்ட் ரூ.2,13,68,152, சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயரில் 900 ஏக்கரில் கொடநாடு டீ எஸ்டேட் மற்றும் ஃபேக்டரி ரூ.7,60,00,000, வெலகாபுரம் கிராமத்தில் மெடோ அக்ரோ ஃபார்ம்ஸுக்கு 210.33 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,200 ஏக்கர், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், முட்டுக்காடு, வெட்டுவாங்கேணி, பையனூர், சிறுதாவூர், சோழிங்கநல்லூர் செய்யூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மன்னார்குடி என தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலி நிலம், கட்டடம், கடைகள் மற்றும் விளைநிலங்களும் வாங்கப்பட்டுள்ளன. சென்னையில் கிண்டி, டி.டி.கே ரோடு, மவுண்ட் ரோடு, லஸ் பகுதிகளில் இடங்கள், கட்டடங்கள் வாங்கப்பட்டுள்ளன.

பையனூர் பங்களா ரூ.1,25,90,261, ஹைதராபாத் திராட்சைத் தோட்டப் பண்ணை வீடு ரூ.6,40,33,901, போயஸ் கார்டன் வீடு விரிவாக்கம் ரூ.7,24,98,000, சிறுதாவூர் பங்களா ரூ.5,40,52,298 உட்பட பல இடங்களில் உள்ள பண்ணை வீடுகள், புதிய கட்டடங்களின் மராமத்துப் பணிகளின் செலவுகள் பட்டியலிடப்பட்டன.

இளவரசி அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.2,42,211, ஜெயலலிதா அக்கவுன்டில் மயிலாப்பூர் கனரா வங்கியில் ரூ.19,29,561, மயிலாப்பூர் ஸ்டேட் பேங்க்கில் ரூ.1,70,570 சசிகலா பெயரில் கிண்டி கனரா வங்கியில் ரூ.3,17,242, சுதாகரன் அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.5,46,577 என, பல பெயர்களில் பல வங்கிகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட கார்கள் டாடா சியரா ரூ.4,01,131, மாருதி 800 ரூ.60,435, மாருதி ஜிப்ஸி, ட்ராக்ஸ் ஜீப், ஜெயா பப்ளிகேஷன் டாடா எஸ்டேட் கார், டாடா மொபைல் வேன் என பல மாடல்களில் 30க்கும் மேற்பட்ட கார்கள் வாங்கியிருக்கிறார்கள்.

போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட 389 ஜோடி செருப்புகள் ரூ.2,00,902, 914 பட்டுப் புடவைகள் ரூ.61,13,700, மற்ற புடவைகள் ரூ.27,08,720 மற்றும் பழைய புடவைகள் ரூ.4,21,870, 28 கிலோ தங்க நகைகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட வைரக்கற்கள் என 306 சொத்துகளின் அப்போதைய மதிப்பு ரூ.66,44,73,573’’ என்று விடாமல் வாசித்து முடித்தார்.

மே 15 ஆம் தேதியோடு அரசு தரப்பு இறுதி வாதம் முடிந்துவிடும் என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சிக்னோரா உட்பட ஏழு நிறுவனங்கள், ‘’எங்களுடைய ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். எங்களையும் இந்த வழக்கில் இணைத்துக்கொண்டு மீண்டும் மூல வழக்கை விசாரிக்க வேண்டும். அதுவரை மூல வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்‘’ என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணைக்காக, அரசு வழக்கறிஞர் பவானி சிங் கர்நாடக உயர் நீதிமன்றம் சென்றுவிட்டதால், ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு நடக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா மாலை 4 மணி வரை காத்திருந்தார். அடுத்த நாள் 16 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் என்பதைக்கூட பொருட்படுத்தாமல், அரசு தரப்பு இறுதி வாதத்தைத் தொடர ஆணையிட்டார்.

இதற்கிடையே கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பில், ‘’இந்த வழக்கில் பல சந்தர்ப்பங்களில் உண்மையை மறைத்து விசாரணையைத் திசைதிருப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. வழக்கைத் தாமதப்படுத்தும் நோக்கத்தில் பிரதிவாதிகள் செயல்படும்போது அதற்கு சரியான பதில் கொடுக்காமல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செயல்படுவதாகத் தெரிகிறது. இது சரியானதல்ல. இது கண்டனத்துக்கு உரியது. உண்மையை மறைக்கும் முயற்சியும் குற்றமே. நீதிமன்றத்தை ஏமாற்றுபவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பது தீர்ப்பின்போது பிரதிபலிக்கும்‘’ என்று கூறியதோடு, மூல வழக்கு விசாரணைக்குத் தடைகோரிய மனுவை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாராயணசாமி தள்ளுபடி செய்து 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

16 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு நிலம் கொடுத்தவர்களான, திருநெல்வேலி கருங்குளம், வெள்ளக்குளம் பகுதிகளைச் சேர்ந்த பாஸ்கரன், ஜெயராமன், வீராசாமி, ஸ்ரீதர், சமுத்திரபாண்டி, பிச்சைக்கனி நாடார், அருணாசலம் ஆகியோர் சாட்சியளித்தனர். அவர்களிடம் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஜூனியர் மராடி குறுக்கு விசாரணை நடத்தினார்.

இடையிடையே நீதிபதி குன்ஹா சாட்சிகளிடம் தமிழில் சந்தேகங்களைக் கேட்டு அசத்தினார்.  

வீராசாமி, பாண்டி ஆகியோரிடம் விசாரணை நடந்தது. அனைத்து கேள்விக்கும் தெரியாது என்று சொல்லிக்கொண்டு இருந்தார் வீராசாமி. ‘’இந்த கோர்ட்டில் என்ன கேஸ் நடந்துட்டு இருக்குன்னாவது தெரியுமா?’’ என்று வக்கீல் கேட்டார். ‘’அம்மா கேஸ்’’ என்று சொன்னார் வீராசாமி.

இதேபோன்று மற்றவர்களிடமும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. ‘ஒரு ஏக்கர் என்ன விலைக்குக் கொடுத்தீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘2,000 ரூபாய்க்கு’ என்றும், ‘உங்க சொத்தை யார் வாங்கியது தெரியுமா?’ என்றதற்கு ‘தெரியாது’ என்றும், ‘எதற்காக நிலத்தைக் கொடுத்தீர்கள்?’ என்றதற்கு சிலர் ‘கஷ்டத்துக்காக’ என்றும், சிலர் ‘கிராமத்தில் உள்ள எல்லோரும் கொடுத்தாங்க. நாங்களும் கொடுத்துட்டோம்’ என்றும் பதிலளித்தனர்.

இந்த சாட்சிகளின் விசாரணை முடித்து, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணி முதல் 4.30 மணி வரை இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் அவர்கள் நேர்முக, மறைமுக பங்குதாரர்களாக இருக்கும் 32 நிறுவனங்களின் பெயர்களில் 1991 முதல் 1996 வரை சேர்த்த 306 சொத்துகள் பட்டியலை கடந்த 9 ஆம் தேதி வாசித்ததைப்போல 1991 முதல் 1996 வரை செய்த 248 செலவுப் பட்டியல்களை அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஜூனியர் மராடி வாசித்தார்.

மராடி வாசித்த செலவுப் பட்டியலில் இருந்து...

சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கியில் ஜெயா பப்ளிகேஷன் வாங்கிய 1.5 கோடிக்கு கடனுக்குச் செலுத்திய வட்டி ரூ.50,93,921. இதே வங்கியில் சசி என்டர்பிரைசஸ் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய தொகை ரூ.18,32,683. இதே கிளையில் லெக்ஸ் ப்ராபர்ட்டீஸ் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியது ரூ.17,52,069.
ஆர்.பி.எஃப் நிதி நிறுவனத்தில் இளவரசி வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியது ரூ.4,41,569. மயிலாப்பூர் கனரா வங்கியில் இருந்து சேலம் ஸ்டோர்ஸுக்கு ஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்து செலுத்திய தொகை ரூ.12,73,642.
இதே வங்கியில் இருந்து பி.பி.எல். கேலரிக்கு ஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்து செலுத்திய தொகை ரூ.1,28,530. இதே வங்கியில் இருந்து கே.கே.வேணுகோபால் அவர்களுக்கு ஜெயலலிதா கணக்கில் இருந்து செலுத்திய தொகை ரூ.5,95,000. இதே வங்கியில் இருந்து மதுரை காமராஜர் யுனிவர்சிட்டிக்கு ரூ.5,00,000. மௌலி அட்வர்டைஸுக்கு ரூ.11,00,000- ம் ஜெயலலிதா கணக்கில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

1987 - 88 ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரூ.2,50,445; 1988 - 89 ஆம் ஆண்டுக்கு ரூ.5,63,482; 1989-  90 ஆம் ஆண்டுக்கு ரூ.8,18,161; 1990 - 91 ஆம் ஆண்டுக்கு ரூ.30,61,549... இப்படி ஜெயலலிதா 1997 வரை வருமான வரி கட்டியுள்ளார். 88-  89 ஆண்டுக்கு ரூ.89,619; 1989 - 90 ஆண்டுக்கு ரூ.2,68,475; 92- 93 ஆம் ஆண்டுக்கு ரூ.13,51,590 என சொத்து வரி கட்டியுள்ளார்.

இதேபோல் சசிகலா 91-ல் இருந்துதான் வருமான வரி கட்டுகிறார். 91-  92 ஆம் ஆண்டுக்கு ரூ.2,23,750; 92 - 93 ஆம் ஆண்டுக்கு ரூ.3,00,550; 93 - 94 ஆம் ஆண்டுக்கு ரூ.7,62,151 என வருமான வரி கட்டியுள்ளார். 91- 92 ஆம் ஆண்டுக்கு ரூ.14,240; 92 - 93 ஆம் ஆண்டுக்கு ரூ.1,17,955 என சொத்து வரி கட்டியுள்ளார்.

ஐந்தாண்டில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வேலைபார்த்த ஆட்களின் சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவு ரூ.16,15,500. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் - சத்தியலட்சுமி திருமணச் செலவு ரூ.6,45,04,222. கொடநாடு பங்களா கட்டிய செலவு ரூ.12,20,310. மன்னார்குடியில் செங்கமலம் தாயார் நினைவு மகளிர் கல்லூரிக்கு டைல்ஸ் மற்றும் மார்பிள்ஸ் வாங்க சசிகலா கொடுத்த தொகை ரூ.10,82,420.

ஜெயா பப்ளிகேஷன் கட்டிய மின்சாரக் கட்டணம் ரூ.2,69,102. 1993 முதல் 96 வரை ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் கட்டிய மின்சாரக் கட்டணம் ரூ.7,38,433. குமரன் சில்க்ஸுக்கு ரூ.4,84,712, ஜேம்ஸ் ஃபிரெட்ரிக் -ரூ.30,00,000. இப்படி 1991 முதல் 1996 வரை செலவுசெய்த மொத்த செலவு தொகை ரூ.12,00,59,338.


ad

ad