புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014





ங்க இலக்கியம் முதல் சமகாலம் வரை கவிகளால் பாடப்பெறும் காவிரி ஆற்றை, தமிழகத்தின் வரலாற்றிலிருந்து பிரித்துவிட முடியுமா? செய்துகாட்டி இருக்கிறார் கள், தமிழகத்தில் அதுவும் அரசாங்கமே!

இது மட்டுமல்ல, பதின் மூன்று மாவட்டங்களுக்கு பாசனத்துக்கும் குடிக்கவும் தண்ணீர்தரும் மேட்டூர் அணையையும் காணா மல்போக வைத்துவிட்டார் கள் எனக் குமுறுகிறார்கள், சேலம் மாவட்டத்தில். 

தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வமான இணை யதளம், www.tn.gov.inஎன்ற வலைத்தள முகவரியில் செயல்பட்டு வருகிறது. இதன் தமிழ்ப் பகுதியில் தமிழ்நாடு பற்றிய கட்டுரை யில், மாநிலத்தின் வரலாறு, புவியியல், நிர்வாகப் பிரிவு கள், விவசாயம், தொழில் மற்றும் கனிமங்கள், பாச னம், மின்சாரம், போக்கு வரத்து, விழாக்கள், சுற்று லாத்தலங்கள் ஆகியவை பற்றி குறிப்பிடப் பட்டுள்ளன. பாசனம் எனும் தலைப்பில், தமிழகத்தின் மிக முக்கிய நீர்ப்பாசனம் என பெரியாறு, வைகை அணைகள், பரம்பிக் குளம் ஆழியாறு அணை பற்றி மட்டுமே குறிப் பிடப்பட்டுள்ளது. ஆற்று நீர்ப் பாசனங்களென வைகை, தாமிரபரணி, வெள்ளாறு, பெண்ணை யாறு, அமராவதி ஆகியவை மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளன. காவிரி பற்றியும் மேட்டூர் அணை பற்றியும் ஒரு வார்த்தையும் காணோம்.  நம்மிடம் பொங்கிய மேட்டூர் நகரவாசியான முருகேசன், ""முதலமைச்சரை எல்லோரும் காவிரித்தாய்னு புகழறாங்க. காவிரி நீருக்கு கர்நாடக அரசுகிட்ட பல வருஷமா போராடி நமக்கான உரிமை இன்னும் முழுமையா கிடைக்கல; இந்த மாதிரி இருக்கும்போது இணையதளத்தில் பதிவு செய்யாம இருந்தா, காவிரி நீர் கர்நாடகாவுக்கு மட்டும்தான் சொந்தம்னு தப்பா நெனைக்கமாட்டாங்களா?''’என்றார். 

சமூக ஆர்வலரான தமிழரசன், ""சுமார் 16 லட்சம் எக்டேர் பரப்பில் குறுவை, சம்பா, தாளடினு மூணு போக நெல் உற்பத்திக்கு மேட்டூர் அணையிலிருந்துதான் தண்ணி வருது. வெளிநாட்டுக் காரங்க தமிழ்நாட்டின் சிறப்பையும் உண்மையான வரலாற்றையும் தெரிஞ்சுக்க தமிழக அரசின் இணையதளத்தைத் தானே பயன்படுத்துவாங்க. காவிரி ஆறு, மேட்டூர் அணை பத்திய தகவல்களைப் பதிவு செய்யாம இருப்பது, ஒரு வரலாற்றை மறைக்கிறதுக்கு சமம். மறைக்கப்பட்ட தகவல்களை உடனடியா இணையதளத்தில பதிவுசெய்யணும்''’என்றார் அழுத்தமாக. 

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டின பென்னி குயிக்குக்குக் நன்றிக்கடன் செலுத்த மணிமண்டபம் எழுப்புகிற தமிழக அரசு, மேட்டூர் அணையைக் கட்டச்செய்த ஆங்கிலேயப் பொறியாளர் ஸ்டான்லி யை அவமதிப்பதாக இல் லையா எனும் குரல்களும் கேட்கின்றன. 

என்ன பதில் சொல்லு மோ தமிழக அரசு?

ad

ad