புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2014

ஜெயகுமாரி, விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க முயற்சித்த கோபி என்பவருக்கு தங்குமிடத்தை வழங்கியதற்கான சாட்சியங்கள் இருப்பதால், அவருக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர்
சட்டமா அதிபர்கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பா.ஜெயகுமாரி, விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க முயற்சித்த கோபி என்பவருக்கு தங்குமிடத்தை வழங்கியதற்கான சாட்சியங்கள் இருப்பதால், அவருக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர் நேற்று உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயகுமாரி தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்திருந்த மனு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இந்தே கோரிக்கையை விடுத்தார்.
எனினும் அப்படியான சாட்சியங்கள் இருந்தால், அதனை சமர்பிக்குமாறு உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
ஜெயகுமாரி குறித்து நடைபெறும் விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால், முடிவடைந்த பின்னர், உடனடியாக அதனை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அரச சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது தரப்பு வாதிக்கு எதிராக சாடசியங்கள் இல்லை எனவும் ஜெயகுமாரியின் செயற்பாடுகள் காரணமாக அவரை பழிவாங்குவதற்காக அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஜெயகுமாரி கடந்த காலங்களில் காணாமல் தனது மகனை தேடி தருமாறு கோரி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டார்.
அத்துடன் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை செய்திருந்தார். பிரித்தானிய பிரதமர் வடக்குக்கு விஜயம் செய்த போது நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அவரே ஒழுங்கு செய்திருந்தார்.
இதன் காரணமாக அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பினரும் அவரை பழிவாங்கியுள்ளனர் எனவும் ஜெயகுமாரியின் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சட்டமா அதிபரின் சாட்சியங்களை விசாரிப்பதற்காக உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை நவம்பர் 17ம் திகதிக்கு ஒத்திவைத்தது.
சுதந்திரமான நிறுவனமாக இயங்கி வந்த இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் இயங்கி வருகிறது.
தற்போதைய சட்டமா அதிபர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad