புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2014


மத்திய தரைக் கடலில் கப்பலை மூழ்கடித்து 500 அகதிகளை கொன்ற கடத்தல்காரர்கள்

சிரியா, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம்புக கப்பலில்
புறப்பட்டு சென்றனர். எகிப்தில் உள்ள டமிட்டா என்ற இடத்தில் இருந்து சுமார் 500 பேர் புறப்பட்டனர்.

கடந்த 6–ந்தேதி புறப்பட்ட இவர்கள் 10–ந்தேதி மத்திய தரைக்கடலில் மால்டா தீவு அருகே வந்தபோது கப்பலில் அழைத்து வந்த கடத்தல் காரர்கள் அகதிகளை பல சிறிய படகுகளில் ஏறி செல்லுமாறு கூறினர்.

அவை மிக சிறியதாக இருந்ததால் அதில் ஏற அகதிகள் மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கப்பலை தாக்கி அடித்து கடலில் மூழ்கடித்தனர்.

இச்சம்பவத்தில் 500 பேர் பலியாகினர். 9 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். படகில் அழைத்து வரப்பட்ட அவர்கள் நடந்த விவரங்களை தெரிவித்தனர்.

இந்த தகவலை சர்வதேச இடம் பெயர் வோர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் பெர்தியூம் தெரிவித்துள்ளார். சமீப ஆண்டுகளில் நடந்த கப்பல் விபத்தில் அது மிகவும் மோசமானது என கருதப்படுகிறது.

ad

ad