புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2014

ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் சிறப்புச் சந்திப்புக்களை மேற்கொள்ளும் அனந்தி மற்றும் ரவிகரன்

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 27வது கூட்டத் தொடரின் 7வது நாளான நேற்று இலங்கையில் நடை பெற்ற மனித உரிமை சம்மந்தமான சந்திப்புகள் கேட்போர் கூடங்களில் மேற்கொள்ளப்பட்டது.



"இலங்கையிலும் வெளியிலும் நடை பெறும் மனித உரிமை மீறல் சம்மந்தமான ஒன்று கூடல்" எனும் தலைப்பில் சந்திப்புகள் இடம்பெற்றது.



சந்திப்பில் வட மாகான உறுப்பினரும் , தமிழரசுக் கட்சியின் மகளீர் அணித் தலைவியுமான அனந்தி சசிதரன் மற்றும் வடமாகாணசபையின் முல்லை  மாவட்ட மாகான  சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரனும் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர்.



தமிழர் தாயகத்தில் சிறீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குறிப்பாக, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் போனோர் தொடர்பிலும், நில ஆக்கிரமிப்பு தொடர்பிலும்விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

ad

ad