புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2014

இலங்கை தமிழ் உளவாளி பற்றி திடுக்கிடும் உண்மைகள்

பாகிஸ்தான் உளவாளியான அருண்செல்வராசன் குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளியான அருண் செல்வராசன் என்பவர் (29) கடந்த 10ம் திகதி சென்னையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் இலங்கையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரை பற்றி பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
இவர், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான நாகை, காஞ்சீபுரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளை நோட்டமிட்டு புகைப்படம் எடுத்துள்ளதாகவும், அது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் அடங்கிய சி.டி.யை தேசிய புலனாய்வு பொலிசார் பறிமுதல் செய்துள்ளதாகவும், இந்தப் புகைப்படங்கள் அனைத்தையும் அருண் செல்வராசன் பாராசூட்டில் பறந்தபடி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கல்பாக்கம் அணுமின் நிலையம் குறித்த புகைப்படங்கள் அதிகளவில் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
6 மாதத்திற்கு ஒரு முறை கடலோர மாவட்டங்களில் நடக்கும் ஆபரேசன் ஆம்லா என்ற பாதுகாப்பு ஒத்திகையை நோட்டமிட்டு கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகள் எந்தவித பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்துகிறார்கள், கடல் வழியாக ஊடுருவும் தீவிரவாதிகளை தடுக்க எந்தவித யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை மிகவும் நுணுக்கமாக அறிந்து இலங்கையில் உள்ள பாகிஸ்தான் துணை தூதரக அதிகாரிகளுக்கு அருண் செல்வராசன் தெரிவித்துள்ளார்.
இதனால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை தகர்க்க சதி நடந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இவர்கள் தங்களுக்குள் இந்த தகவல் பரிமாற்றங்களை மிகவும் ரகசியமாக வைத்திருந்துள்ளனர்.
மேலும் அருண்செல்வராசனிடம் இருந்து இலங்கை எண் கொண்ட 4 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம்தான் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் துணை தூதரக அதிகாரிகளுக்கும், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள உளவாளி ஜாகீர்உசேனிடமும் அடிக்கடி பேசி வந்துள்ளார்.
இதற்குரிய ஆதாரங்களையும் தேசிய புலனாய்வு பொலிசார் சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடல் வழியாக தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி வருவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும் என்பதால் கடலோர மாவட்டங்களை பெரும்பாலும் குறி வைத்து அருண்செல்வராசன் நோட்டமிட்டு புகைப்படங்களை எடுத்து அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அருண் செல்வராசனை பொலிஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட பிறகு இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என்றும், மேலும் பாகிஸ்தான் உளவாளிகள் எத்தனை பேர் தமிழகத்தில் ஊடுருவி உள்ளார்கள் என்பது குறித்தும் தெரியவரும் எனவும் கூறப்படுகிறது.

ad

ad