அனிருத் இசையில் கே.ஜே.யேசுதாஸ் பாடல்
இப்படத்தில் விஜய் தனது சொந்த குரலில் ‘செல்பிபுள்ள’ என்ற பாடலை பாடியுள்ளார். இந்நிலையில், கே.ஜே.யேசுதாசும் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் அனிருத் குறிப்பிட்டுள்ளார். யேசுதாஸ் பாடிய பாடல் தனக்கு தெய்வீக அனுபவத்தை தருவதாகவும் அனிருத் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, அனிருத் இசையில் பழம்பெரும் பாடகி ஜானகி ‘வேலையில்லா பட்டதாரி’ படத்துக்காக பாடியுள்ளார். தற்போது ‘கத்தி’ படத்துக்காக யேசுதாஸ் அனிருத் இசையில் பாடியுள்ளார். ‘கத்தி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். படத்தை தீபாவளிக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகிறது.