புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2014

அரசாங்கத்துக்கும் எங்களுக்கும் முரண்பாடு - விமல் வீரவன்ச 
அரசாங்கத்துடன் எங்களுக்கு முரண்பாடு உண்டு என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


நாம் கிடைப்பதனை சாப்பிட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டமல்ல அத்துடன் குடும்ப அரசியலினால் நாட்டுக்கு நன்மை ஏற்படப் போவதில்லை. முதலில் தந்தை பின்னர் தாய் அதன் பின்னர் மகன் என்ற குடும்ப அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிக்க வேண்டும்.

படையினர் உயிர்த்தியாகம் செய்து நாட்டை மீட்டெடுத்தது, பிரதேச அரசியல்வாதிகளின் குடும்பங்களை போசிப்பதற்கு அல்ல. பிரதேச அரசியல்வாதிகளின் நலன்களை கருத்திற் கொண்டு புலிகள் தோற்கடிக்கப்படவில்லை.

புலிகளை போரின் மூலம் தோற்கடிக்க முடியாது என குறிப்பிட்ட காலத்தில் நாம் புலிகளை தோற்கடித்து நாட்டை ஒன்றிணைக்க முடியும் எனத் தெரிவித்தோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊவா மாகாணசபைத் தேர்தலில் புதிய தீர்மானம் ஒன்றை மக்கள் எடுக்க வேண்டும். பழைய கட்சிகளுக்கு தெரிந்த முகங்களுக்கு வாக்களிப்பதனை தவிர்த்து, புதியவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.

அத்துடன் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad