புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2014

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பாதுகாப்பு பலப்படுத்த இணக்கம்- கூட்டுத் திட்டம் வெளியானது
சீனாவும் இலங்கையும் ஒரு நாட்டின் இறைமையில் மற்றும் ஒரு நாடு அல்லது அமைப்பு தலையிடுவதை எதிர்ப்பது
என்ற கொள்கையில் இணக்கம் கண்டுள்ளன.
அத்துடன் இரண்டு நாடுகளிலும் அரசியல், சமூக கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு சமாதானமான தீர்வுகள் விடயத்திலும் ஏனைய நாடுகளின் அமைப்புக்களின் தலையீடுகளை எதிர்ப்பதில் இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.
இதேவேளை இலங்கையின் ஒற்றுமை, சமாதானம் மற்றும் நல்லிணக்க விடயங்களில் சீனா ஆதரவை வழங்கும் என்று சீனாவின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இரண்டு நாடுகளும் இணைந்து இன்று இணைந்த திட்டம் ஒன்றையும் வெளியிட்டுள்ளன.
இதன்படி இன்று இலங்கைக்கு வந்த சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் உட்பட்டவர்களை சந்தித்து உரையாடியுள்ளார்.
இதன்போது பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் கலாச்சார ரீதியான இணக்கங்கள் எட்டப்பட்டன.
அத்துடன் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பான ஆரம்ப ஆய்வுகள் தொடர்பில் இரண்டு நாடுகளும் திருப்தியை வெளியிட்டுள்ளன.
இதேவேளை, நுவன்புர அதிவேக பாதை, வடக்கு அதிவேக பாதை, ஜின் நிலவள ஆறு திசை திருப்பல், தேசிய விமான நிலையங்களின் புனரமைப்பு, பெற்றோலிய சுத்திகரிப்பு உட்பட்ட திட்டங்களுக்கு நிதியுதவியை சீனா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இரண்டு நாடுகளும் கரையோரப் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, ஆராய்ச்சியும் காப்பாற்றுதலும் கடல் பாதுகாப்பு போன்ற விடயங்களிலும் இணக்கங்களை கண்டுள்ளன. அத்துடன் இரண்டு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை பலப்படுத்த இணங்கியுள்ளன.
இதன்படி இராணுவப் பயிற்சிகள், அதிகாரி பயிற்சிகள், விஞ்ஞான உதவிகள், பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல்கள் போன்றவற்றை ஒரு திட்டத்துக்குள் மேற்கொள்ள இரண்டு நாடுகளும் இணங்கியுள்ளன.

ad

ad