புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2015

கூடங்குளத்தில் 3, 4-வது அணுஉலைகள் அமைக்க எதிர்ப்பு கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அருகே உள்ள இடிந்தகரை கிராமத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தற்போது கூடங்குளத்தில் 3, 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கூடங்குளம் போராட்டக் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

கூடங்குளத்தில் 3, 4-வது அணு உலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவில் இடிந்தகரை கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் போராட்டக்குழுவினர் இடிந்தகரை கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். போராட்டக் குழுவைச் சேர்ந்த முகிலன் மற்றும் திரளான பெண்கள், சிறுவர்-சிறுமிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அணுஉலையை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். முன்னதாக அனைவரும் இடிந்தகரை ஆலயத்தில் புத்தாண்டு பிரார்த்தனை செய்துவிட்டு, அங்கிருந்து ஊர்வலமாக கடற்கரைக்கு சென்றனர்.

ad

ad