புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2015

யங்கர பனிப்பொழிவால் வீதியில் முட்டிமோதிய வாகனங்கள்



கனடா ஒன்ராறியோவின் கிழக்குப் பகுதியில் அதிகப்படியான பனிப்பொழிவு மற்றும் வழுக்கலான வீதியால் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துள்ளாகின.

புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட இந்த சிக்கலான நிலையால் நெடுஞ்சாலை 401 கிழக்கு கிங்ஸ்ரனிற்கு அருகில் பல மணிநேரம் மூடப்பட்டது.
விபத்து நடந்த பகுதி 5 மணிநேரத்திற்கும் மேலாக மூடப்பட்டு, சேதமடைந்த வாகனங்கள் இழுக்கும் டிரக்குகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.
ஒன்ராறியோ மாகாண பொலிசார் வாகன குவியல் விபத்தில் அகப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தாத போதிலும் மோதலில் கிட்டத்தட்ட 75 வாகனங்கள் வரை விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மேலும் அப்பகுதியில் காலநிலையும் வீதி நிலவரங்களும் மிக மோசமாக காணப்பட்டதாக போக்குவரத்து கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வீதி கறுப்பு பனியுடன் காணப்படுவதால் சாரதிகளை மெதுவாக வாகனங்களை செலுத்துமாறு ஒன்ராறியோ மாகாண பொலிசார் எச்சரித்துள்ளனர்.
நாப்பனே மற்றும் புறொக்வில் பகுதிகளில் வேகமான பனிப்பொழிவு காணப்படுவதாகவும் சில இடங்களில் 15 சென்ரிமீற்றர்களிற்கும் மேலான பனி பெய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ad

ad