புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2015

நாவாந்துறையில் மீண்டும் பதற்றம் புத்தாண்டு பிறக்கும் வேளையில் இளைஞர் குழு மோதல்


நாவாந்துறையில் இரு தரப்பினருக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டதனால் அங்கு  மேலும் பதற்ற நிலைமை அதிகரித்துள்ளது. 

இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11.30  மணியளவில் நாவாந்துறை சந்தைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதில் 3 கடைகள் சேதமாக்கப் பட்டுள்ளதோடு சிலர் காயமடைந்து முள்ளனர் என யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தாண்டு பிறப்பான நேற்று முன்தினம் இரவு நாவாந்துறை சென்.மேரிஸ் மற்றும் சென்.நீக் கிலஸ் ஆகிய இரு பிரிவினர்களிடையே இம் மோதல் இடம்பெற்றுள்ளது.

மோதலினால் அப்பகுதி எங்கும் கண்ணாடி போத்தல்களினால் நிறைந்து காணப்படுகின்றன.

மோதலில் ஈடுபட்டவர்கள் போத் தல்களினால் வீசித்தாக்குதல் மேற் கொண்டதாகவும் தாம் அவ்விடத்திற்கு விரைந்ததும் மோதலில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நாவாந்துறையில் ஏற்பட்ட அசா தாரண சூழ்நிலையையடுத்த அங்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அண்மையில் நாவாந்துறையில் சென்.மேரிஸ், சென்.நீக்கிலஸ் இடையே ஏற்பட்ட மோதலால் பலர் காயமடைந்ததோடு பல்லாயிரக்கணக்கான சொத்து மதிப்புடைய பொருட்களும் சேதமாக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் பொலிஸாரின் தலையீட்டையடுத்து இருதரப்பும் சமாதானமாக சென்றிருந்தனர்.

இம்மோதலின் தொடர்ச்சியா கவே நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.     

ad

ad