புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2015

மகிந்தவின் அதிகாரி பண மோசடி


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையதிகாரி காமினி சேனரத் மேற்கொண்ட ஊழல்கள் தொடர்பில், ஜாதிக ஹெல உறுமய நேற்று தேசிய வருவாய் திணைக்களத்திடம் முறைப்பாடு ஒன்றை முன் வைத்ததுள்ளது.
இதில் சேனரத் மேற்கொண்ட பாரிய ஊழல்கள் மற்றும் முறை கேடுகள் தொடர்பில் தகவல்கள் அடக்கப்பட்டுள்ளன. இதன்படி 2014 ஆம் ஆண்டு சேனரத், ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கறுப்புப்பணங்களை நான்கு கறுப்புப்பைகளில் இட்டு அவரின் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இதன்பின்னர் அதே ஆண்டு நான்கு பைகளில் பெருந்தொகை கறுப் புப்பணத்தை இட்டு அவற்றையும் தமது வீட்டுக்கு எடுத்துச்சென்றுள் ளார். இந்தநிலையில் கொழும் பில் 100 கோடி ரூபாய்கள் செலவில் அவர் மாடி வீடு ஒன்றை அமைத்துள்ளார்.
இதனைதவிர தமது மாமியின் பெயரில் 100 கோடி ரூபாய்கள் செலவில் வீடு ஒன்றை அவர் அமைத்துள்ளார்.

மாலபேயில் பல ஏக்கர் காணியில் 100 கோடிரூபாயில் கைத்தொழில் மையம் ஒன்றை சேனரத் அமைத் துள்ளார். பொல்கொடவிலும் அவருக்கு காணி இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ள
து

ad

ad