புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2015

பிரம்மாண்டமாக நடந்த உலகக் கோப்பை தொடக்க விழா: இந்தியக் கொடியின் ஒளிவெள்ளத்தால் ஆர்ப்பரித்த ரசிகர்கள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியது. போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் தொடக்க விழா நிகழ்ச்
சிகள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இன்று களைகட்டின. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் அந்நகர மேயர் லின்னே டல்ஜியல் கலந்து கொண்டார். முன்னதாக போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கலாச்சார நாட்டிய விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ், தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டி வில்லியர்ஸ் ஆகியோர் மேடையில் தோன்றி, இந்த உலக கோப்பை போட்டிகள் குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் இசை நிகழ்ச்சியும், வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. போட்டியில் பங்கேற்கும் 14 நாடுகளின் கொடிகளும் அணிவகுப்பாக கொண்டு வரப்பட்டன. இதே போல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தொடக்க விழா கோலாகலமாக நடந்தது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக உலக கோப்பை போட்டியை எதிர்பார்த்துள்ளனர். ஒளிவிளக்குகளால் பல வண்ணங்களில் அசைந்தாடிய, பிரம்மாண்டமான பேட்டிங் செய்யும் உருவத்தின் அசைவுகள் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. விழாவின் தொடக்கமாக ஜிம்பாப்வே பாடகர்களும் மவுரி நடனக்குழுவினரும் தங்கள் துள்ளலான பாடல் மற்றும் நடனத்தால் ரசிகர்களை வரவேற்றனர். பின்னர் இலங்கையைச் சேர்ந்த நடனக்கலைஞர்கள் தங்கள் பாரம்பரிய நடனத்தை எழிலாக ஆடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினர். தென் ஆப்பிரிக்கக் கலைஞர்களும் தங்கள் சாமர்த்தியத்தைக் காட்ட, அடுத்து வந்த ஸ்காட்லாந்து ‘பேக்பைப்பர்’ இசைக்கலைஞர்கள் ரசிகர்களின் கொண்டாட்ட மனநிலையை மேலும் அதிகரித்தனர். பாகிஸ்தான் நாட்டுக் கலைஞர்கள் மேடையேறி தங்கள் நாட்டுப் பாடல்களை பாடியபடி தங்கள் தேசியக் கொடியை அசைத்து தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர். இந்திய நடனக்கலைஞர்கள் மேடையேறியதும் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று ஆரவாரம் செய்தனர். ரசிகர்களின் மேல் இந்தியக் கொடியின் மூன்று வண்ணங்கள் பிரம்மாண்ட விளக்குகளால் அலை அலையாய் தவழ்ந்த போது அரங்கமே அதிர்ந்தது.

ad

ad