புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.


ஸ்ரீரங்கம் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு இடைவிடாது நடைபெறும். ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்து 129 ஆகும். இவர்களில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 20, பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 96. இதர வாக்காளர்கள் 13 பேர் ஆவார்கள்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் இன்று நடக்கும் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை மொத்தமுள்ள 322 வாக்குச் சாவடிகளிலும் வெப்காஸ்டிங் மூலம், தொடக்கம் முதல் முடிவு வரை வாக்குப்பதிவு வீடியோ பதிவு செய்யப்படும். தேர்தல் பணிக்காக 31 மண்டல குழுக்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடத்தப்படுகின்றன. இரண்டாயிரம் போலீசார், மத்திய ஆயுதப் படை போலீசார், அனைத்து வாக்குச்சாவடி பகுதிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மாலை வாக்குப்பதிவு முடிவடைந்தபின் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள் தலைமையில், முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூடி முத்திரையிட்டு, பலத்த பாதுகாப்புடன் பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்து செல்பவர்கள் குறித்து வீடியோ பதிவும் மேற்கொள்ளப்படுகிறது. பின்னர், 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய மத்திய, மாநில காவல்துறையினர் மூன்றடுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 16-ந்தேதி வரை கண்காணிக்கப்படும். 16–ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 

ad

ad