புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2015

உலக கோப்பையை வெல்ல தென்ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு: லட்சுமண் கணிப்பு

உலக கோப்பையை வெல்ல தென் ஆப்பிரிக்காவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண்
தெரிவித்துள்ளார். தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக கூறியதாவது:– 2011 உலக கோப்பை போட்டிக்கு முன்பு அனுபவம், இளம் வீரர்கள் ஆகியவற்றால் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்று கருதப்பட்டது. அது மாதிரியான நிலைதான் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு உள்ளது. டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி அனைத்து நிலையிலும் சிறந்து விளங்குகிறது. பேட்டிங் வரிசை பலம் பெற்று காணப்படுகிறது. ஆல் ரவுண்டர்கள் அதிகமான பேர் உள்ளனர். ஆட்டத்தை நிறைவு செய்வதில் வல்லவர்கள். உலகின் சிறந்து பந்து வீச்சாளர்களை கொண்டது. இதனால் உலக கோப்பையை வெல்ல தென் ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். உலகின் சிறந்த அணிகளில் ஒன்றான தென்ஆப்பிரிக்கா இதுவரை உலக கோப்பையை வென்றது இல்லை. 1992, 1999–ல் அரைஇறுதியில் அதிர்ஷ்டம் இல்லாமல் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது. -

ad

ad