புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2015

மோடி-மைத்திரி 45 நிமிட சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான சந்திப்பு எதிர்வரும் 16 ஆம் திகதி இந்திய தலைநகர் புதுடில்லியில் இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பு 45 நிமிடங் கள் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது வெளிநாட்டு விஜயத்திற்கு ஜனாதி பதி தலைமையிலான குழு எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளது.

இப்பயணத்தின் போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, வெளியுறவுதுறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் குறித்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது இந்திய ஜனாதி பதி பிரணாப் முகர்ஜியுடன் கலந் துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது
.

ad

ad