புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2015

" எல்லாம் அவன் செயல்"
" அவனின்றி ஒரு அணுவும் அசையாது"
தயவு செய்து சுமந்திரன் அவர்கள் பத்திரிகைகளை வாசித்தால் அல்லது எனது முகநூலிலுள்ள பதிவுகளை தொடர்ந்து
வாசித்தால் தற்போதைய அரசின் நிலைப்பாடுகளையும் அரசிலிலுள்ள அமைச்சர்களின் நிலைப்பாடுகளையும் அறிந்துகொள்ளலாம்.
அது மட்டுமல்லாமல் ஒன்றை நான் மிகவும் தெளிவாகச் சொல்லலாம் என நினைக்கின்றேன். வடகிழக்கைத் தவிர்ந்த பிரதேசங்களில் தமிழில் பேசுவதற்கும் குங்குமப்பொட்டு வைத்து பஸ்களில் பயணிப்பதற்கும் பயந்திருந்த காலகட்டங்களை மாற்றியமைத்ததிற்கு காரணமானவர்கள் தங்களது இன்னுயிரை எமது ஈழதேச மக்களின் சுதந்திரமான சுகவாழ்விற்காக அர்ப்பணித்த எமது போராளிகள்.
அதேபோல இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு முக்கிய காரணகர்த்தாக்கள்(காரணமானவர்கள்) எமது தேசியத் தலைவரினால் எமது போராட்டம் பாரப்படுத்தப்பட்ட "புலம்பெயர் உறவுகள்". இவர்களது போராட்டங்களும் அவர்களது அரசியல் சாணாக்கியமான நடவடிக்கைகளுமே இலங்கை நாட்டில் சர்வதேச தலையீட்டிற்கு வழிவகுத்தது.
தூரநோக்கற்ற பார்வையினாலும் சுயநல அரசியலாலும் இவ்வளவு அழிவுகளுக்கும் காரணமானவர்கள் கடந்தகால தமிழ் அரசியல்வாதிகள்.
வீரவசனம் பேசி இளைஞர்களை உசுப்பேத்தி " தமிழ் ஈழம்" தான் இறுதி முடிவு என்று கூறி வட்டுக்கோட்டை தீர்மானத்தைக் கொண்டுவந்து மக்களிடமிருந்தும் பெற்ற ஏகோபித்த ஆதரவோடு பாராளுமன்றம் சென்று "எதிர்க்கட்சி தலைவர்" ஆசனத்திலிருந்த மயக்கத்தில் எம்மினத்திற்கு எதிராக சிங்கள தேச அரசான இதே UNP அரசிலிருந்த தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவினரது மாமனார் ஜே ஆர் ஜெயவர்த்தனா அவர்களினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதச் சட்டத்திற்கு (PTA) எதிராக எந்தவொரு வசனம் கூட பேசாமல் அமைதியாகவிருந்து அப்போதிருந்த UNP அரசுடன் இரகசியமாக இணங்கியிருந்து (இணக்க அரசியல்) ஊறவன் பெத்த பிள்ளைகளை கொலைக்களத்துக்கு அனுப்பியவர்கள் இதே "தமிழ் அரசு" க் கட்சியினரே.
அது மட்டுமல்லாமல் இன்று சிறையிலிருக்கும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளது சிறைவாசத்திற்கும் காரணமானவர்கள் "தமிழ் அரசு" க் கட்சியினர் தான் என்பதை யாரும் இலகுவில் மறுதலித்துவிடமுடியாது.
எமது இனத்திலிருந்து கடந்த காலங்களில் "தமிழ் அரசு" க் கட்சியூடாக வந்த பலரை பார்த்திருக்கின்றோம். "நீலன் திருச்செல்வம்" அவர்களைப் பார்த்திருக்கின்றோம் அவரினால் சந்திரிகா அம்மையாருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டு இலங்கையின் பிரதமர் பதவி தனக்கு கிடைக்கும் என்ற நப்பாசையினால் எமது மறவர்களின் புனிதமான மக்கள் போராட்டத்திற்கு "பயங்கரவாதம்" என்று பெயர் கூறி சர்வதேசத்தை கடந்த காலத்தில் தனது கபடத்தனமான செயற்பாட்டினால் மாற்றியமைத்த "கதிர்காமர்" அவர்களையும் பார்த்திருக்கின்றோம்.
சிங்களம் மட்டும் சட்டம் வந்ததன் பின்பு இன்று வரை எமது இனத்தின் சார்பாக தெரிவுசெய்யப்பட்ட எந்தவொரு "தமிழ் அரசு" க் கட்சி உறுப்பினர்கள் உட்பட யாருமே பங்கு பற்றியிராத சுதந்திரதின விழாவில் எமது இனத்தின் தற்போதைய தலைவரான கெளரவ இரா சம்பந்தன் ஐயா அவர்களை அவரது தள்ளாத வயதைச் சாதகமாக பயன்படுத்தி சம்பந்தன் ஐயா அவர்களையும் கூட்டிச்சென்று ஏதோ ஒரு மூளையில் நித்திரை கொள்ள விட்டுவிட்டு தாங்கள் தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வந்ததையும் மறந்து இப்பேற்பட்ட தீர்மானங்களை எடுப்பதற்கு முன்பதாக கூட்டமைப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளின் சம்மதத்தையும் பெற்றுக்கொள்ளவேண்டுமென்ற கடப்பாட்டையும் மறந்து தங்கள் குடும்பத்துடன் எந்தவிதமான மனச்சஞ்சலமுமின்றி சுதந்திர தின விழாவில் பங்குபற்றிய உங்களையும் பார்த்திருக்கின்றோம்.
சுதந்திர தின விழாவில் பங்கு பற்றியது தவறானது என்ற போர்வையில் "தமிழ் அரசு" க் கட்சித்தலைவர் மாவை அண்ணரையும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாம் பார்த்திருக்கிறோம் அதன் பின்பு தங்களது இந்தப்பதவிகளை தக்க வைப்பதற்காகவும் சுகபோக அரசியல் வாழ்வுக்காகவும் "தமிழ் அரசு" க் கட்சியிலுள்ளவர்களும் போராளிகளின் அழிவுகளையும், அவர்களது துன்பதுயரங்களையும் சாதகமாகப் பயன்படுத்தி அரசியலைக் கொண்டு செல்லுகின்ற "தமிழ் அரசு"க் கட்சியும் உங்களது செயல்களை ஆமோதித்ததையும் நாம் பார்த்திருக்கின்றோம்.
அதேவேளை அரச பதவி வகித்திருந்தும் நீதியரசராக பதவிவகித்த வேளை சுதந்திரதின விழாவில் பங்குபற்ற வேண்டும் என்று சுற்றுநிருபம் வந்திருந்தும் கூட சுதந்திரவிழாக்களில் பங்குபற்றியிராத "இறைதூதர்" நீதியரசர் எமது மக்கள் இன்று வரை யாருக்குமே வழங்காத வாக்குகளை (ஆதரவை) வழங்கி வெற்றிபெற வைத்து முதன்முதலாக வடமாகாணத்தில் தங்களை ஆளுமாறு மனதார ஆசி வழங்கி அரவணைத்த எமது முதல்வர் க வி விக்கினேஸ்வரன் ஐயா அவர்களையும் அவரது "உண்மைத்துவம்"த்தையும் இன்று பார்க்கின்றோம், பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
எமது முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களின் உண்மைத்துவத்தின் முன்பாக தங்களது பச்சோந்தித்தனமான கபடதார அரசியல் அடிபட்டுப் போய்விடும் என்ற பயத்தில் "தமிழ் அரசு" க் கட்சியிலிருந்துகொண்டே முதலமைச்சருக்கு எதிராக செயற்படும் பலரையும் பார்க்கின்றோம் , பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
இறைவன் ஆட்டுவித்தால் ஆடாதவர் யாருமே இல்லை என்பதை ஒரு நாள் அனைவரும் உணர்ந்து கொள்வீர்கள் நண்பர்களே!

ad

ad