புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2015

வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ள ஊடகவியலாளர்கள் நாடு திரும்புவர்

வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ள ஊடகவியலாளர்கள் நாடு திரும்புவர் 
கடந்த காலங்களில் அரசியல் அழுத்தம் மற்றும் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்த ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்பத்தயாராக உள்ளனர் என்றும், அவர்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன என்றும் வெகுஜன ஊடக மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக சபையில் தெரிவித்தார். 
 
நாடாளுமன்றில் கடந்த புதன்கிழமை இடம் பெற்ற வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  
முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தனது கேள்வியில், கடந்த காலத்தில் காணாமற்போன அல்லது அழுத்தம் காரணமாக வெளிநாடு சென்ற ஊடகவியலாளர்கள் உள்ளனரா என்பதையும், அந்த ஊடகவியலாளர்களைக் கண்டுபிடிப்பதற்கு அல்லது இந்நாட்டுக்கு வரவழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் கேட்டார்.
 
இதற்குப் பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக,
ஜனநாயக நாட்டில் ஊடக சுதந்திரம் இருக்கவேண்டும். கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் தமது கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்ததால் ஏற்பட்ட அரசியல் அழுத்தம், உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம்புகுந்துள்ளனர்.
 
இவ்வாறு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளவர்களை மீண்டும் நாட்டுக்கு வருமாறு நாம் அழைப்பு விடுத்துள்ளோம். அவர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு நாம் முயற்சித்து வருகின்றோம். அதற்கான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.
 
ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலி கொட தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். அது மட்டுமன்றி, அவரது குடும்பத்துக்கான வருமான வழிமுறையயான்றைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துவருகின்றோம். 
 
மேலும், ஊடக வியலாளர் ரிச்சர்ட் சொய்ஸா கொலை தொடர்பில் விசாரிக்க நாம் தயாராக உள்ளோம் என்றார். 
-

ad

ad