புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2015

ஜெனீவாவில் தொடர்ச்சியான இராஜதந்திர சந்திப்புக்களில் சிவாஜிலிங்கம் ,மகாலிங்கம்




ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என்று பலருடனும் தொடர்ச்சியான சந்திப்புக்களை நடாத்தி வருகின்றது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில், (APPGT ) தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவர் Lee Scott அவர்கள்
( Member of Parliament for Ilford North ) கனேடிய தமிழர் காங்கிரஸ் ( Canadian Tamil Congress), அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை ( United States Tamil Political Action Council), ஆகிய அமைப்புக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுவே இந்த சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகிறது.
தாயகத்தில் இருந்து ஐ .நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் மகாலிங்கம் சிவாஜிலிங்கம், Lee Scott அவர்களை சந்தித்து தாயகத்தின் தற்போதைய நிலைமைகளை எடுத்துக் கூறியதுடன்,
2009 இறுதி யுத்தத்தில் கைதானவர்களின் கதி என்ன? போன்ற பல விடயங்களையும் எடுத்துரைத்தார்.
கடந்த 67 வருடங்களாக இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடைபெற்றுக் கொண்டிருப்பது இன அழிப்பே என்ற தீர்மானம் வடமாகாண சபையால் கொண்டு வரப்பட்டது. அத்தீர்மானத்தின் ஒரு பிரதியை திரு Lee Scott அவர்களிடம் கையளித்தார் சிவாஜிலிங்கம்.

ad

ad