புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2015

போயஸ் கார்டனில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

T
















கைத்தறி நெசவாளர் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, முதல் அமைச்சர் ஜெயலலிதாவை இன்று அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கைத்தறி நெசவாளர்கள் விழா, முதல் முறையாக சென்னையில் இன்று நடைபெற்றது.  இதில் கலந்து கொள்வதற்காக  இன்று காலை 7.45 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்பட்ட பிரதமர் மோடி,  காலை 10.30 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார்.  பிரதமர் நரேந்திரமோடியை தமிழக கவர்னர் கே.ரோசய்யா, முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் வரவேற்றனர். 

பின்னர், காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் வந்த பிரதமர் நரேந்திரமோடி அங்கு நடைபெறும் கைத்தறி நெசவாளர்கள் விழாவில் கலந்து கொண்டு பேசினார்.  நிகழ்ச்சி முடிவடைந்ததும். அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமர் நரேந்திரமோடி,  போயஸ் கார்டனில் உள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு வருகை தந்தார். போயஸ் கார்டன் வருகை தந்த பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் ஜெயலலிதா வரவேற்றார். 

பின்னர் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம்,  காவிரி நதி நீர் ஒழுங்கு முறை, மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண கச்சத்தீவை மீட்பது, சரக்கு சேவை வரியில் இருந்து பெட்ரோலிய பொருட்களுக்கு விலக்கு அளிப்பது, தீபகற்ப நதிகளை தேசிய மயமாக்குவது, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கபட்ட தடையை நீக்குவது  உள்ளிட்ட பல்வேறு தமிழக நலன்கள் அடங்கிய கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் ஜெயலலிதா வழங்கினார். தொடர்ந்து இரு தலைவர்களும் போயஸ் கார்டனில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். சுமார் 45 நிமிடம் இந்த பேச்சு வார்த்தை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சு வார்த்தைக்கு பின்னர்   பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா மதிய விருந்தும் அளித்தார்.

இதன் பின்னர், தனது பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் நரேந்திரமோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

ad

ad