புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2015

பொய்ச் செய்திகள், வதந்திகள் குறித்து த.தே.கூ வேட்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் விளக்கம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உள்ள அமோக மக்கள் ஆதரவிற்கு களத்தில் சவால் விட முடியாதவர்கள், இணைத்யத்தில் பொய்களையும், போலியான செய்திகளையும் பரப்பி வருவதாக இன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான எம். ஏ. சுமந்திரன், திருமதி மதினி நெல்சன் ஆகியோருடன்,
மாகாண சபை உறுப்பினர்கள் ஆர்னோல்ட், கஜதீபன், சயந்தன், சுகிர்தன், சிவயோகன் ஆகியோர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகவும், வேட்பாளர்களுக்கு எதிராகவும் பரப்பப்படும் செய்திகளின் உண்மைத் தன்மை, பின்னணி நோக்கம் ஆகியவை குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் நற்பெயருக்கும் ஒற்றுமைக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், அவர்கள் சொல்லாத தகவல்களும், நடைபெறாத சம்பவங்களும் செய்திகளாக கற்பனை செய்யப்பட்டு ஒரு சில நம்பத்தகாத இணையத்தளங்களிலும், முகமற்ற முகநூல் கணக்குகளிலும் வெளியிடப்படுகின்றன,
தேர்தல் முடியும் வரை இது தொடரும் நிலை காணப்படலாம். மக்களின் ஆதரவு இல்லாதவர்கள், இப்படியான செயல்களை செய்து தங்களுக்கு சிறிய ஆதரவாவது கிடைக்காதா என்று ஏங்குகின்றனர்.
இனிவரும் நாட்களிலும் இப்படியான செயல்களை செய்வார்கள் என்பது புரிகின்றது என்று  கஜரூபன் தெரிவித்தார். 
மேலும் தான் தெரிவித்ததாக ஒரு இணையத்தளத்தில் வெளிவந்த செய்தி பொய்யானது என்றும், தான் அதனை தெரிவிக்கவில்லை என்றும், அதனை முற்றாக மறுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்துள்ள பத்து வேட்பாளர்களும் திறமையானவர்கள், தகுதியானவர்கள், அந்த வேட்பாளர்கள் ஒரு புரிந்துணர்வுடன் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்,
இவர்கள் எல்லோரும் வெல்ல முடியாவிட்டாலும், ஏழு உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்புவது என்னும் நோக்கத்துடன் மாகாணசபை உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைபிற்கு அதிகரித்துவரும் ஆதரவை சகிக்க முடியாதவர்கள் போலி இணையத்தளங்கள் மூலம் பொய்களை பரப்புகின்றனர் என்று சுகிர்தன்  இங்கு கருத்து தெரிவிக்கும் பொழுது குறிப்பிட்டார்.
திருமதி மதினி நெல்சன், தான் குறிப்பிடாத ஒரு விடயம், தனது பெயரில் வெளியிடப்பட்டமை குறித்து கவலை வெளியிட்டார்.
தேர்தல் காலத்தில் வெற்றியை முடக்கும் நோக்குடன் செய்திகளை சிலர் வெளியிட முயல்வதையும் அவர் கண்டித்தார்.
இங்கு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த சட்டத்தரணி சுமந்திரன்,
மக்களின் ஆதரவை பெற முடியாதவர்கள் வேட்பாளர்கள் குறித்து பொய்களையும், கதைகளையும் இப்பொழுதே எழுத ஆரம்பித்துவிட்டார்கள், அது ஒருவகையில் நல்லது, இந்தப் பொய்கள் குறித்து விளக்கம் சொல்ல எமக்கு அவகாசம் கிடைத்தது,
இதிலிருந்து நாம் ஊகிக்க முடியும், தேர்தல் முடியும் வரையும் இதனை தொடர்ந்தும் செய்வார்கள், ஆகவே கதைகளையும், பொய்களையும் நம்ப வேண்டாம் என்று இப்பொழுதே சொல்லிக் கொள்கின்றேன்.
அதே போன்று சர்வதேச விசாரணையை நாம் கேட்கவில்லை என்றும் கூட பொய்களை அவிழ்த்து விட்டுள்ளனர். “திரு. சுமந்திரன் சர்வதேச விசாரணையை கோரினார்” என்று பெப்ரவரி 23, , 2014 அன்று தனது பேட்டியில், குறிப்பிட்டவர்,
தான் அப்படி சொல்லிவிட்டேன் என்பதைக் கூட மறந்து, தான் மட்டும்தான் சர்வதேச விசாரணையை கோரியதாக இப்பொழுது சொல்கின்றார், இப்படியானவர்கள் தான் பொய்களை பரப்புகின்றனர், ஆனால் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

ad

ad