புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

7 ஆக., 2015

5 ரன்களுக்கு 5 விக்கெட்: இஷாந்த் ஷர்மா அசத்தல்


,

இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இஷாந்த் ஷர்மா 5 ரன்களை விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதற்கு முன்பாக ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுகிறது.இதன்படி இந்தியா – இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான மூன்று நாள் பயிற்சி ஆட்டம் கொழும்பில் நேற்று தொடங்கியது. 

 இதில், டாஸ் ஜெயித்த இலங்கை வாரிய கேப்டன் திரிமன்னே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. எதிர்பார்க்கபட்ட ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சொதப்பினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரகானே சதம் அடித்து அசத்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 79 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்துள்ளது. இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் சிறிது நேரம் மட்டுமே தாக்கு பிடித்த இந்திய அணி 351 ரன்களுக்கு  ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி இஷாந்த் சர்மாவின்  புயல் வேக தாக்குதலுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறியது. தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் ஷர்மா இலங்கையை  திணறடித்தார்.  உணவு இடைவேளை வரை அந்த அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை தடுமாறி வருகிறது. வெறும்  4 ஓவர்களை மட்டுமே வீசிய  இஷாந்த் சர்மா 5 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.