புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2015

ரகானே அசத்தல் சதம்: முதல் நாளில் இந்தியா 314 ஓட்டங்கள் சேர்ப்பு


இலங்கை பிரெசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் முடிவில்  இந்தியா 314 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 
இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
அதற்கு முன்பாக இலங்கை பிரசிடென்ட் லெவன் அணியுடன் மூன்று நாள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடுகிறது.
இந்த போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் ’வென்ற இலங்கை லெவன் அணி கேப்டன் திரிமான்னே, பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் ஷிகர் தவானும் லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடினர்.
இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 108 ஓட்டங்களாக இருந்தபோது லோகேஷ் ராகுல் 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக ஆடிய தவான் அரைசதம் அடித்தார். பின்னர் வந்த ரோகித் சர்மா 7 ஓட்டங்களிலும் கோஹ்லி 8 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
சிறிது நேரத்தில் தவானும் 7 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
பின்னர் இணைந்த ரகானே மற்றும் புஜாரா மேற்கொண்டு விக்கெட்டுகள் விழுவதை தடுக்க தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வப்போது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா அணியின் ஓட்டங்கள் அதிகரித்தது.
இந்நிலையில் புஜாரா 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விர்தமான் சாகா விரைவாக ஆட்டமிழந்ததால் ரகானேவுடன் அஷ்வின் இணைந்தார்.
சிறப்பாக ஆடிய ரகானே சதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 79 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 314 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
ரகானே 109 ஓட்டங்களுடனும் அஷ்வின் 10 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை தரப்பில் கசன் ரஜித்தா 3 விக்கெட்களும் ஜெப்ரி வெண்டர்சே 2 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர்.

ad

ad