புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2015

சிவாஜிலிங்கத்தின் சுயேச்சைக்குழுவின் அறிக்கை


குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14ம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலைான குழுவினரின் கேரிக்கைக்ள வருமாறு
:-.
இலங்கைப் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் - 2015 - குருணாகல் தேர்தல் மாவட்டம்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் சுயேட்சைக்குழு- இல 14 ல் போட்டியிடும் குழுவின் கோரிக்கைகள்
1. தமிழ் அரசு உட்பட ஐந்து அரசுகள் கொண்ட இலங்கை ஒன்றியம் (Union of Ceylon) கூட்டு இணைப்பாட்சியின் அடிப்படையிலேயே (confederation) இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணமுடியும். திருகோணமலை (தமிழ் அரசு),கண்டி (மலைநாடு),அநுராதபுரம் (இராஐரட்டை),காலி (ருகுணு) ஸ்ரீ ஜெயவர்தனபுர (மாயரட்ட) ஆகியவற்றை அரசுகளின் தலைநகரங்களாகித் தேர்வு செய்ய முடியும். பாதுகாப்பு, வெளிவிவகாரம் மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்.மத்திய அரசு ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் கொழும்பில் இயங்கும்.
2. கடைசிப் போரில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த சுமார் 6000 போராளிகள் உட்பட காணமல் போன 18,000 தமிழர்களின் நிலைபற்றி இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.
3. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் (தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உட்பட) நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். பயங்கரவாதத்தடைச் சட்டத்தையும் உடனடியாக நீக்க வேண்டும்.
4. தமிழர் தாயகத்தில் அரசு உதவியுடனான சிங்களக் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி, இராணுவ ஆட்சியை மீளப்பெறு, உயர்பாதுகாப்பு வலயங்களை முற்றாக நீக்கு.
5. இலங்கை அரச படைகளினால் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்காகவும், (GENOCIDE) போர்க் குற்றங்களுக்காகவும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காகவும் சுதந்திர சர்வதேச நீதி விசாரணை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (INTERNATIONAL CRIMINAL COURT) அல்லது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (INTERNATIONAL CRIMINAL TRIBUNAL) ஒன்றின் ஊடாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்புக் கருதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் நிறுத்தப்படக் கூடியவாறு இலங்கை அரசு ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும்.
6. இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சுவார்த்தைகளில் ஐக்கிய நாடுகள் சபையின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும்.
7. இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் 70,000 ஏக்கர் காணிகள் இலங்கை அரச படைகளினால் சுவீகாரம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள சுமார் 3000 ஏக்கர் காணிகளைத் தவிர மிகுதி நிலங்கள்  விடுவிக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்து மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்பட வேண்டும்.
8. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு தனியான மொழி, கலை, கலாச்சாரம், தாயகம்,பொதுப் பொருளாதாரம் இருப்பதனால் அவர்கள் ஒரு தேசிய இனமாக விளங்குகின்றனர். தமிழ்த் தேசிய இனமக்களின் சுயநிர்ணய உரிமை என்பது ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட உரிமை. தமிழ் அரசு மதச்சார்பற்ற அரசாக விளங்குவதோடு தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் அனைவரும் சமஉரிமையுடன் வாழ வழிவகை செய்யப்படும்.
9. போரில் கொல்லப்பட்டவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும், சொத்து அழிவுகளுக்கும் போதியளவு நஷ்டஈடு வழங்கப்படுவதை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். போரினால் பாதிக்கப்பட்;டவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் இடம் பெறவேண்டும்.
10. தமிழ் மக்களின் ஆகக் குறைந்த கோரிக்கையான இணைப்பாட்சியை (சமஷ்டி) தீர்வாக வழங்க இலங்கை அரசு விரும்பாது விட்டால் (Unwill) அல்லது இலங்கை அரசினால் முடியாதுவிட்டால் (Uhagll) ஐக்கிய நாடுகள் சபை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரு சர்வசன வாக்கெடுப்பை (Referendum) நடாத்தி மக்களின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
சுயேட்சைக் குழு - இல 14
“வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழ் மக்களாக இருக்கட்டும்”

நாய்க்கு கல்லெறிந்தால் அது காலைத் தூக்குவது போல, எதைச் செய்தாலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அதற்குள் இனவாதத்தை கொண்டுவருகின்றார் என குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
இலங்கை அரசாங்கம் சமஷ்டி கோரிக்கையை வழங்காவிட்டால், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்தி தமிழ் மக்களின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரணடைந்த 600 போராளிகள் மற்றும் காணாமற்போன 18,000 தமிழர்கள் தொடர்பில், இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.
காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட 10 விடயங்களை முன்னிறுத்தி இந்தத் தேர்தலில் தான் போட்டியிடுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ad

ad