புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2016

பாரிஸ் மற்றும் தேன் மேற்கு ஜெர்மனி வெள்ளநிலை ஓரளவு கட்டுப்பாடில் உள்ளது

பிரான்ஸின் பாரிஸ் நகரில் செயின் ஆற்றின் நீர் மட்டமானது சாதாரண மட்டத்திலிருந்து 19 அடி வரை உயர்ந்ததால் அ
ந்நகரில் பல பிராந்தியங்களில் வரலாறு காணாத பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வௌ்ள அனர்த்தம் காரணமாக பாரிஸ் நகரிலுள்ள உலகப் பிரபல லோவுர் அருங்காட்சியம் மற்றும் ஒர்சே அருங்காட்சியம் என்பன மூடப்பட்டு அவற்றின் கீழ் மாடிகளிலிருந்த விலைமதிப்பற்ற கலைப்படைப்புகள் மேல் மாடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
வெள்ள அனர்த்தம் காரணமாக பிரான்ஸிலும் ஜேர்மனியிலும் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய ஐரோப்பாவில் மேலும் கடும் மழை வீழ்ச்சி இடம்பெறலாம் என எதிர்வு கூறப்படுகின்ற நிலையில் வெள்ளம் இன்னும் தீவிரமடையலாம் என அஞ்சப்படுகிறது.
தென் ஜேர்மனியிலுள்ள பல நகர்களும், பெல்ஜியமும், போலந்தும் இந்த வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலண்ட் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
மத்திய பாரிஸில் சியன் ஆற்றங்கரையோரமாக அமைந்த புகையிரதப் பாதை மூடப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் மட்டும் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி குறைந்தது 9 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.
பவேரியா பிராந்தியத்தில் சிம்பச் எனும் இடத்திலுள்ள வீடொன்றின் கீழ் தளத்தில் 78 வயது பெண்ணொருவரும் அவரது 56 வயதுடைய மகளும் 28 வயதான பேத்தியும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அந்தப் பிராந்தியத்தில் 75 வயது ஆணொருவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அதேசமயம் அதன் அயல் கிராமமான ஜுல்பச்சில் 80 வயது பெண்ணொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மெர்கெல் தெரிவிக்கையில், இந்த வெள்ள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக முழு நாடும் துக்கம் அனுஷ்டிப்பதாக கூறினார்.


ad

ad