புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 ஜூன், 2016

வேட்டை கும்பலில் இருந்து தப்பி வந்த யானை உதவிக்கு மனிதர்களை அணுகிய சம்பவம்


ஜிம்பாப்வே நாட்டின் மஷோனாலேண்ட் மேற்கு மாகாணம் மலைப்பகுதியில் உள்ளது. சுற்றுலா பகுதியான இங்கு ஏராளமான ரிசார்ட்டுகள் உள்ளன. இந்நிலையில், இந்த மலைப்பகுதியில் குண்டு காயத்தால் மிகவும் மோசமான அளவில் காயம் அடைந்த யானை ஒன்று உதவிக்காக பிரபல புமி ஹில்ஸ் சபாரி லாட்ஜுக்கு வந்து கதவை தட்டியுள்ளது. 

வாடிக்கையாளர் வந்திருப்பதாக நினைத்து வெளியில் வந்து பார்த்த ஊழியர்கள் ஆச்சரியமும் பதற்றமும் அடைந்தனர். யானை ஒன்று மிகவும் சோர்வடைந்த நிலையில் கிழே சரிந்து விழுந்தது. இதையடுத்து ஊழியர்கள் கால்நடை மருத்துவர் ஒருவரை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். அந்த லாட்ஜில் இருந்து சுமார் 200 மைல் தொலைவில் கால்நடை மருத்துவர் இருந்துள்ளார். அவர்கள் இந்த லாட்ஜை வந்தடைய சுமார் 6 மணி நேரம் ஆகியுள்ளது. அதுவரை அந்த யானைக்கு தண்ணீரும், புற்களும் கொடுத்துள்ளனர். யானையும் அதுவரை பொறுமையாக அங்கேயே இருந்துள்ளது.

மருத்துவர்கள் வந்து யானையை பரிசோதித்ததில், யானையின் தோள்பட்டையில் குண்டு பாய்ந்த காயம் இருந்துள்ளது. பின்னர் யானைக்கு மருத்துவம் பார்த்துள்ளனர். வேட்டைக்கும்பல் யானையை சுட்டிருக்கலாம் என்றும், அதில் இருந்து தப்பி வந்த யானை உதவிக்கு மனிதர்களை அணுகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.