புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2016

பிரெஞ்சு ஓபன்: செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் முகுருஸா

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின்
மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கணை செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்பைன் முகுருஸா.
முகுருஸா 7-5,  6-4 என்ற நேர் செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தினார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸும், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவும் விளையாடினார்.
முதல் செட் ஆட்டத்தில் இருவரும் விட்டுக் கொடுக்காமல் விளையாடினர். இறுதியில் செரீனாவின் சர்வீஸை முறியடித்து 7-5 முதல் செட்டை கைப்பற்றினார் முகுருஸா.
இரண்டாது செட்டில் தான் சர்வீஸ் செய்த முதல் கேமை இழந்தார் செரீனா. எனினும், சுதாரித்து விளையாடிய அவர் முகுருஸாவின் சர்வீஸை முறியடித்து சமநிலையை ஏற்படுத்தினார். எனினும், தொடர்ந்து தான் சர்வீஸ் செய்த கேமை இழந்தார்.
இரண்டாவது செட்டின்  9-வது கேமில் 3-5 என்ற நிலையில் பின்தங்கியிருந்த நிலையில் சர்வீஸ் செய்தார் செரீனா. சுமார் 7 நிமிஷம் நடைபெற்ற அந்த கேமில் 4 மேட்ச் பாயிண்ட்களைத் தவிர்த்த செரீனா கேமை வசப்படுத்தினார். எனினும், முகுருஸா தனது அடுத்த கேமை வசப்படுத்தி, முதல் நிலை வீராங்கணை செரீனாவை 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தனது முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.

ad

ad