புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 ஜூன், 2016

பிரபல குத்து சண்டை வீரர் முகமது அலி காலமானார்
உலக புகழ் பொற்ற குத்துச் சண்டை வீரர் முகமது அலி (வயது 74) காலமானார். அமெரிக்காவின் பினிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் பாப் கன்னெல் கூறியிருப்பதாவது: பார்கின்சன்'ஸ் நோய் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூன்று முறை உலக சாம்பியன்ப்டடம் பெற்றுள்ள அவர் கடந்த 2014-ல் நிமோனியா காய்ச்சல் மற்றும் 2015-ல் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு பார்கின்சன்'ஸ் நோய் ஏற்பட்டதான் காரணமாக மீண்டும் முருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என கூறினார். பார்கின்சன்'ஸ் நோய் என்பது நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உடலின் தசைகள் விறைப்பு ஏற்படும் விதமான நோய் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்முறை குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னராக வலம் வந்தர் முகமது அலி. 74 வயதான அவர் தனது இளமை காலங்களில் 61 போட்டிகளில் 56 வெற்றிகளை குவித்தார். மேலும் வரிசையாக மூன்று முறை உலக சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தினார். தொழில்முறை குத்துச்சண்டையில் அவர் 5 போட்டிகளில் மட்டுமே தோல்வியை எதிர்கொண்டார்.

1981ல் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அதன்பின்னர் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது