புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2016

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு இவ்வாண்டு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்!

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் உள்ளிட்ட 25,000 வெளிநாட்டவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் இரட்டைக் குடியுரிமை
வழங்கப்படும் என உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நவீன்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
இந்த ஆண்டு நிறைவிற்குள் 25,000 வெளிநாட்டவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நண்பர்கள், நெருக்கமானவர்களுக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் எமது அரசாங்கம் மாற்றத்தை செய்துள்ளது. அரசியல் கட்சி, நிறம், இனம், மதம், ஜாதி பேதம் பாராட்டாது இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு ஒர் கிரமமான முறையின் அடிப்படையில் இரட்டைக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளின் பத்தாயிரம் பிரஜைகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் மாதமொன்றுக்கு இரண்டாயிரம் பேருக்கேனும் இரட்டைக் குடியுரிமை வழங்குவதே எமது திட்டமாகும்.
எனினும், இந்த நடவடிக்கையானது அவ்வளவு சுலபமானதல்ல. இதனால் இந்த இலக்கை அடைவதில் சிரமங்கள் காணப்படுகின்றன.
சர்வதேச ரீதியாக தேடப்பட்டு வரும் திருடர்கள், பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு பேணும் எவருக்கும் நாம் இரட்டைக் குடியுரிமை வழங்கப் போவதில்லை என அமைச்சர் நாவீன்ன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ad

ad