புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, மார்ச் 02, 2018

எதிரணிக்குச் செல்கிறார் பிரதி அமைச்சர் புஞ்சிநிலமே

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிரணியில் அமர்ந்து கொள்வதற்கு, பொது முகாமைத்துவ பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் அனுமதி கோரியுள்ளார்.தமது நிலைப்பாட்டை சிறிலங்கா அதிபரிடம் விளக்கிக் கூறியுள்ளதாகவும், எனினும், ஒரு மாதம் பொறுத்திருக்கும் படி அவர் கேட்டுக் கொண்டதாகவும், புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார்.தமது தொகுதி மக்களின் விருப்பத்துக்கேற்க செயற்பட வேண்டியுள்ளது என்றும், அவர் குறிப்பிட்டார்.சுசந்த புஞ்சி நிலமே திருகோணமலை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது