புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2018

தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் அனந்தி, அருந்தவபாலன், ஐங்கரநேசன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தியடைந்திருந்த வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தியடைந்திருந்த வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அனந்தி சசிதரன், பொ.ஐங்கரநேசன் மற்றும் க.அருந்தவபாலன் ஆகியோர் புதிதாக வருகை தந்திருந்தனர். இவர்கள் மூவரும், தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் இன்று இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சபை ஏற்றுக்கொண்டால் வருகைதந்த மூவரையும் மத்திய குழுவில் இணைத்துக்கொள்ளமுடியும் எனத் தெரிவித்தார். இதனையடுத்து குழு உறுப்பினர்களின் முழு சம்மதத்துடன் மூவரும் மத்தியகுழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

ஈபிஆர்எல்எவ் சார்பில் தெரிவாகி அமைச்சராக பதவி வகித்த ஐங்கரநேசனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள் க.அருந்தவபாலன் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராகச் செயற்பட்ட அனந்தி சசிதரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad