புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2018

தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை17 மணித்தியாலமாக சுமார் 300 பேர் தமது கார்களுக்குள் முடங்கியிருப்பதாக தகவல்கள்

தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை17 மணித்தியாலமாக சுமார் 300 பேர் தமது கார்களுக்குள் முடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் பல பகுதிகளில் தொடர்ந்து பனி பொழிந்து வருவதனால் பயணிகள் மற்றும் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதிகளில் எம்மா என்ற புயல் தாக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டமையை தொடர்ந்து அங்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் என்றும் இல்லாதவாறு பனியுடன் கூடிய கால நிலை நிலவி வருகிறது.

இதுரை 4 பேர் இந்த கால நிலையினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்கொட்லாந்தில் மிக உயர்ந்த பனிப்பொழிவு எச்சரிக்கையான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கால நிலையினால், பிரித்தானியாவின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில், மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில், எம்மா என்று பெயரிடப்பட்டுள்ள புயல் தாக்கலாம் என்ற அச்சம் விடுக்கப்பட்டுள்ளமையினால் கடுமையான பாதிப்புக்களை சந்திக்க நேரிடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றதுடன், அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கபட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தில் மோட்டர் வேயில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலினால், கடந்த 17 மணித்தியாலமாக சுமார் 300 பேர் தமது கார்களுக்குள் முடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், வீதிகளிலும், மரங்களிலும் எட்டு சென்ரி மீற்றர் அளவில் பனி படந்துள்ளமை காண்பதற்கு அழகாக காட்சியளிக்கின்ற போதிலும் மொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1947 ஆம் ஆண்டிற்கு பின்னர் பிரித்தானியாவில் இவ்வாறான வெப்ப நிலை விழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரி்த்தானிய வானிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளது.

இதேவேளை. இன்று 3 ஆவது நாளகவும், ஸ்கொட்லாந்து உள்ளிட்ட பல பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன். புகையிரத மற்றும் விமானப்போக்கவரத்துக்களும் இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்க்கது.

ad

ad