புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2018

கத்தியால் தலையைப் பிய்க்கும் யாழ்ப்பாண மக்கள்

வீதி­யில் கத்தி கொண்டு செல்­வ­தாக இருந்­தால் சட்ட அனு­மதி பெற­வேண்­டுமா என்று யாழ்ப்பாண மக்களிடையே குழப்­பம் எழுந்­துள்­ளது. சாவ­கச்­சே­ரி­யில் கத்தியைக் கொண்டு சென்ற ஒரு­வ­ருக்கு எதி­ரா­கப் பொலி­ஸார் வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­த­னர். நீதி­மன்­றம் அவ­ருக்கு 50 ரூபா தண்­டம் விதித்­தது. பருத்­தித்­துறை நீதி­மன்­றி­லும் இப்­ப­டி­யா­ன­தொரு வழக்­கில் 150 ரூபா தண்­டம் சில­மா­தங்­க­ளுக்கு முன்­னர் விதிக்­கப்­பட்­டது. இவை மக்­க­ளி­டையே குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
வீதி­யில் கத்தி கொண்டு செல்­வ­தாக இருந்­தால் சட்ட அனு­மதி பெற­வேண்­டுமா என்று யாழ்ப்பாண மக்களிடையே குழப்­பம் எழுந்­துள்­ளது. சாவ­கச்­சே­ரி­யில் கத்தியைக் கொண்டு சென்ற ஒரு­வ­ருக்கு எதி­ரா­கப் பொலி­ஸார் வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­த­னர். நீதி­மன்­றம் அவ­ருக்கு 50 ரூபா தண்­டம் விதித்­தது. பருத்­தித்­துறை நீதி­மன்­றி­லும் இப்­ப­டி­யா­ன­தொரு வழக்­கில் 150 ரூபா தண்­டம் சில­மா­தங்­க­ளுக்கு முன்­னர் விதிக்­கப்­பட்­டது. இவை மக்­க­ளி­டையே குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சாவ­கச்­சே­ரிச் சம்­ப­வத்­தில்‘­தடை செய்­யப்­பட்ட கத்­தியை வைத்­தி­ருந்­தார்’ என்ற குற்­றச்­சாட்­டி­லேயே பொலி­ஸார் வழக்­குத் தொடுத்­தி­ருந்­த­னர். “சுமார் ஒன்­றரை அடி நீளத்­துக்கு மேற்­பட்­ட­தும் ஒன்றே முக்­கால் இஞ்சி அக­லத்­துக்கு மேற்­பட்­ட­து­மான கத்­தி­யை­யும், இரண்டு பக்­கத்­தா­லும் வெட்­டக்­கூ­டி­ய­து­மான கத்­தி­யை­யும் தடை செய்­யப்­பட்ட கத்தி என்று சட்ட ஏற்­பா­டு­க­ளின்­படி வகைப்­பாட்­டுக்­குள் வைத்­தி­ருக்­கி­றோம்”- என்­கின்­ற­னர் பொலி­ஸார்.

“அதற்­கும் அப்­பால் அவற்­றைக் கொண்டு செல்­லும் நோக்­கமே பெரி­தும் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது. கத்­தியை என்ன கார­ணத்­துக்­காக என்ன நோக்­கத்­துக்­கா­கக் கொண்டு செல்­லப்­ப­டு­கி­றது என்­ப­தைப் பொறுத்தே பொலி­ஸார் வழக்­குப் பதிவு செய்­கின்­ற­னர். பொலி­ஸார் சிலர் வேண்­டு­மென்று அத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்­க­ளைச் சுமத்தி நீதி­மன்­றில் வழக்­குத் தொடுக்­கின்­ற­னர் என்­ப­தை­யும் மறுப்­ப­தற்­கில்லை. தவ­றான நோக்­கம் இல்­லா­விட்­டால் பிரச்­சி­னை­யில்லை. சந்­தே­கிக்­கும் வகை­யில் எவ­ரா­வது கத்தி கொண்டு சென்­றால் வழக்­குப் பதிவு செய்­யப்­ப­டு­கின்­றது.”- என்­றும் பொலி­ஸார் கூறு­கின்­ற­னர்.

“தடை செய்­யப்­பட்ட கத்தி” என்­ப­தான சட்ட ஏற்­பா­டு­கள் எவை­யும் இல்லை என்று சட்­டத்­த­ர­ணி­கள் கூறு­கின்­ற­னர்.அப்­ப­டி­யா­னால் தேவை கருதி கத்­தி­யைக் கொண்டு செல்ல முடி­யாதா?. அப்­ப­டிக் கொண்டு செல்­வ­தாக இருந்­தால் சட்­ட­அ­னு­மதி பெற­வேண்­டுமா?. மீளக் குடி­ய­ம­ரும் இடங்­க­ளைச் சேர்ந்த மக்­க­ளுக்கு கத்தி, கோடரி, மண்­வெட்டி உள்­ளிட்ட ஆயு­தங்­கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அவர்­கள் அவற்­றைத் வீதி­யில் கொண்டு செல்­ல­வ­தாக இருந்­தா­லும் சட்ட அனு­மதி பெற­வேண்­டுமா?.

அவர்­கள் மட்­டு­மல்ல, சீவல் தொழில் செய்­ப­வர்­கள், கூலிக்­குக் கதி­யால் வெட்­டச் செல்­ப­வர்­கள் ஏன் வீடு­க­ளில் வளர்க்­கும் ஆடு உள்­ளிட்ட கால்­ந­டை­க­ளுக்­குக் குழை வெட்­டச் செல்­ப­வர்­கள்­கூட கத்­தி­யைக் கொண்டு செல்­வார்­கள். அவர்­கள் என்ன செய்­வது? என்று குழப்­பத்­து­டன் மக்­கள் கேள்வி எழுப்­பு­கின்­ற­னர்.

ad

ad