தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஆகஸ்ட் 06, 2018

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. உயர்தரப் பரீட்சையில் இம்முறை 3 லட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் தோற்றவுள்ளனர். பரீட்சார்த்திகள் தமது அடையாள அட்டை மற்றும் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டுடன் காலை 8 மணிக்கு முன்னர் பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நாடளாவிய ரீதியில் 2268 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.