சனி, ஜூன் 08, 2019

 சுவிஸ்  பீல்  பாப்பா அவர்கள் சங்கத்தாகேணி  பகுதிக்கு  ஒளி  கொடுத்தார் வாழ்க  வளமுடன்
நித்தம் நித்தம் தம்மை சமூகத்தில் பெரிய மனிதர்களாக வெறும் வாய் பேச்சில் மட்டும் இனம் காட்டிக்கொள்ளும்  எத்தனையோ  உறவுகள்    மத்தியில்   மின்னாமல்  முழங்காமல் நிறைய  பணிகளை செய்து விட்டு  சிவனே  என்று  விளம்பரமின்றி  இருக்கிறார்கள்  எம்முறவுகள் அந்த வரிசையில் சுவிஸில் வாழும் பீல் நகரத்தை சேர்ந்த  பாப்பா  என்று  செல்லமாக  அழைக்கப்படும்  மகாலிங்கம்    50 000  ரூபா செலவில் புங்குடுதீவு சங்கத்தங்கேணி பகுதியில்  ஒன்பது  வீதி  மின்விளக்குகளை  பொறுத்த உதவி  செய்துள்ளார்  இந்த பெருந்தகைகளை  வாழ்த்துவோம் உறவுகளே  இது போன்று  முன்பும் செல்லையா சந்திரபாலனும்  சுமார்  50  மின்விளக்குகளை ஆலடியில் இருந்து ஆஸ்பத்திரி  சந்தி ஊடாக ஆஸ்பத்திரி  வரை  பொருத்தி ஆழம்  பார்த்துள்ளார்  இது  போன்ற  உறவுகளின் பணிகளை  மனமுவந்து வாழ்த்த கூட  பல பெரிய தலைகளின்  மனசு  முன்வராது இருதடடிப்பு  செய்வது  உண்மை  உறவுகளே