புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 ஜூன், 2019

கள்ளக்காதல் தகராறில் எரித்து கொல்லப்பட்ட இலங்கை தமிழர்!

நாகர்கோவிலை அடுத்த கரியமாணிக்கபுரம் ஊர் எல்லையில் ஒரு சுடுகாடு உள்ளது. சுடுகாட்டில் நேற்று காலை பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை கண்டு
போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நாகர்கோவில் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஜவகர், கோட்டார் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் மற்றும் போலீசார் சுடுகாட்டிற்கு விரைந்துச் சென்றனர். சுடுகாட்டில் எரிந்த நிலையில் கிடந்த பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் யாரோ மர்ம நபர்கள், வாலிபர் ஒருவரை கொலை செய்து பிணத்தை பெட்ரோல் ஊற்றி எரித்திருப்பது தெரிய வந்தது. எரித்து கொல்லப்பட்ட வாலிபர் யார்? எதற்காக கொல்லப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்பதை கண்டு பிடிக்க போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாத் உத்தரவிட்டார். இதற்காக 2 தனிப்படையும் அமைக்கப்பட்டது.
நாகர்கோவிலை அடுத்த கரியமாணிக்கபுரம் ஊர் எல்லையில் ஒரு சுடுகாடு உள்ளது. சுடுகாட்டில் நேற்று காலை பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நாகர்கோவில் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஜவகர், கோட்டார் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் மற்றும் போலீசார் சுடுகாட்டிற்கு விரைந்துச் சென்றனர். சுடுகாட்டில் எரிந்த நிலையில் கிடந்த பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் யாரோ மர்ம நபர்கள், வாலிபர் ஒருவரை கொலை செய்து பிணத்தை பெட்ரோல் ஊற்றி எரித்திருப்பது தெரிய வந்தது. எரித்து கொல்லப்பட்ட வாலிபர் யார்? எதற்காக கொல்லப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்பதை கண்டு பிடிக்க போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாத் உத்தரவிட்டார். இதற்காக 2 தனிப்படையும் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் மின்னல் வேக விசாரணையை தொடங்கினர். கோட்டார், சுசீந்திரம் பகுதிகளில் மாயமானவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டது. இது போல இன்னொரு தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். இதில் சம்பவம் நடந்த நேரத்தில் கரியமாணிக்கப்புரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு மர்ம கார் சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் அந்த காரின் நம்பரை கண்டு பிடித்து உரிமையாளரை தேடினர். இதில் அந்த கார், நெல்லை மாவட்டம் வள்ளியூர் காமராஜர் தெருவைச் சேர்ந்த ரெசி(வயது33) என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. தனிப்படை போலீசார் வள்ளியூர் சென்று ரெசியை தேடினர். அப்போது அவர் நேற்று முன்தினம் காரில் நாகர்கோவிலில் உள்ள நண்பர்களை பார்க்கச் சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர். ரெசி, வள்ளியூரில் ஸ்டூடியோ நடத்தி வருவதாகவும், தொழில் வி‌ஷயமாக அடிக்கடி நாகர்கோவில் செல்வார் எனவும் அவர்கள் கூறினர். இதையடுத்து ரெசியின் நண்பர்கள் யார்? என போலீசார் கேட்ட போது கன்னியாகுமரி அருகே பெருமாள்புரம், இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் கேத்திஸ்வரன்(24) என தெரிய வந்தது. கேத்திஸ்வரனை போலீசார் பிடித்து விசாரித்தனர். போலீசார் பிடித்ததும் கேத்திஸ்வரன் நடுங்கிப் போனார். ரெசியை கொன்றது நான் தான் என்று போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். அதற்கான காரணம் குறித்து அவர் போலீசாரிடம் கூறியதாவது:- ஸ்டூடியோ அதிபர் ரெசியும் இலங்கை அகதி தான். அவர் முதலில் நெல்லை சமூகரெங்கபுரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்தார். அவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்துச் சென்று விட்டார். ரெசிக்கு போட்டோ கிராபிதெரியும், என்பதால் அவர் வள்ளியூரில் ஸ்டூடியோ தொடங்கினார். இதற்காக அகதி முகாமில் இருந்து வெளியேறி வள்ளியூரில் தங்கினார். இலங்கை அகதி என்பதால் என்னுடன் பழக்கம் ஏற்பட்டது. நாகர்கோவில் பகுதியில் போட்டோ எடுக்க வந்தால் என்னை உதவிக்கு அழைப்பார். நான் அவருடன் அடிக்கடி வேலைக்குச் செல்வேன். இதனால் எனக்கும் அவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் என் வீட்டிற்கு வருவார். அப்போது எனது சகோதரியுடன் ரெசிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் எனக்கு தெரியாமல் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. அக்கம் பக்கத்தினர் மூலம் எனக்கு இந்த தகவல் தெரிந்தது. நான் சகோதரியை கண்டித்தேன். ரெசியிடமும் இந்த பழக்கத்தை விட்டு விடும்படி எச்சரித்தேன். இருவரும் என் பேச்சை கேட்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனக்கு அவப்பெயர் ஏற்படுத்திய ரெசியை கொன்று விட முடிவு செய்தேன். நேற்று முன்தினம் ரம்ஜான் விடுமுறை என்பதால் நாகர்கோவில் வருமாறு ரெசியை அழைத்தேன். அவர் காரில் நாகர்கோவில் வந்தார். இருவரும் காரிலேயே மது அருந்தினோம். பின்னர் நாங்கள் காரில் சுற்றி வந்தோம். அப்போது எனக்கும் ரெசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சகோதரியுடன் உள்ள கள்ள உறவை கைவிடும் படி கூறினேன். அவர் மறுத்தார். ஆத்திரம் அடைந்த நான் கத்தியால் ரெசியை குத்தினேன். கழுத்து, முகம் என பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த ரெசி காரிலேயே பிணமானார். ரத்த வெள்ளத்தில் காருக்குள் இறந்து கிடந்த ரெசியை என்ன செய்வது? என தெரியாமல் திகைத்தேன். இது பற்றி சுசீந்திரம், சன்னதி தெருவைச் சேர்ந்த எனது நண்பர் பழனி என்ற கண்ணன், கன்னியாகுமரி பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த பைசால் ஆகியோரிடம் கூறினேன். அவர்கள் நான் இருந்த காருக்கு விரைந்து வந்தனர். அவர்களில் பழனி, கரிய மாணிக்கபுரம் சுடுகாட்டில் இப்போது யாரும் இருக்க மாட்டார்கள். அங்கு பிணத்தை கொண்டுச் சென்று எரித்து விடுவோம் என்று யோசனை கூறினார். அதன்படி நாங்கள் மூவரும் சேர்ந்து ரெசியின் பிணத்தை எரித்தோம். ஆனால் போலீசார் இவ்வளவு சீக்கிரம் எங்களை கண்டு பிடித்து விடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என்றனர். இதையடுத்து கோட்டார் போலீசார் கேத்திஸ்வரன், பழனி, பைசால் ஆகிய 3 பேரையும் இன்று கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க போலீசார் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.