புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2013

நாவற்குழிக்குச் சொந்தம் கொண்டாடும் சிங்களவர்கள்
நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்களவர்கள், அதுவே தமது பூர்வீக கிராமம் போன்று சொந்தம் கொண்டாடத் தொடங்கியுள்ளதுடன், அங்கு ஒரு சிங்களப் பாடசாலையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 

புனே வாரியர்ஸுக்கு தலைவராக நியமிக்கப்பட்டதை பெருமையாக நினைக்கிறேன் : மெத்தியூஸ்

புனே வாரியர்ஸ் அணித் தலைவராக இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


அமைச்சரவையைக் உடனடியாக கூட்டுமாறு ஹக்கீம் கோரிக்கை? கோட்டாபாய மீது விமர்சனம்
அமைச்சரவையைக் உடனடியாக கூட்டுமாறு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.

சைபர் தாக்குதல் பல்வேறு நாடுகளின் இணைய வலையமைப்பை முடக்கியுள்ளன - இலங்கைக்கு பாதிப்பில்லை
'சைபர் பங்கர்' என்று அடையாளம் காணப்பட்ட கணினி வைரஸ் ஒன்று உட்பட மேலும் சில வைரஸுகள் இணைந்து உலகின் பல்வேறு நாடுகளின் இணைய வலையமைப்பை முடக்கியுள்ளன. இதனால் பல்வேறு தரப்பினரும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தினேஷ் மற்றும் பிரிட்டோ(நான்) ஆகியோரின் கூட்டறிக்கையை இப்பொழுது தான் நான் படித்தேன்
கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாக மாணவர்களாகிய நாம் அரசியல் சார்பில்லாமல் கொள்கை தெளிவுகளோடு தனித்தமிழ் ஈழம் வேண்டி அறவழியில் போராடி வருகிறோம்.மாணவர்களாகிய நாம் ஒற்றை தலைமைக்கோ இரட்டை தலைமைக்கோ இடம் அளிக்க கூடாது கூட்டுத்தலைமை மட்டுமே முன்னிறுத்தப் படவேண்டும்.

என்னுடைய பெயரை பயன் படுத்தி தனிப்பட்ட முறையில் யாரும் அறிக்கையோ அல்லது வேறு செயல்களிலோ ஈடு படவேண்டாம் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மாணவர்களாகிய நாம் ஒட்டு மொத்த தமிழ் சமுகத்தையும் ஒரே குடையின்கீழ் இணைத்து தனித்தமிழீழம் அமைப்பதற்கு போராடவேண்டி இருக்கிறது.

மாணவர்களாகிய நாம் ஒற்றுமையாக இணைந்து போராடுவோம்
வாழ்த்துக்கள்

"தமிழ் எங்கள் குருதி
ஈழம் அது உறுதி "


இதை உடனே பகிர்ந்து கொள்ளுங்கள்
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தினேஷ் மற்றும் பிரிட்டோ(நான்) ஆகியோரின் கூட்டறிக்கையை இப்பொழுது தான் நான் படித்தேன்
கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாக மாணவர்களாகிய நாம் அரசியல் சார்பில்லாமல் கொள்கை தெளிவுகளோடு தனித்தமிழ் ஈழம் வேண்டி அறவழியில் போராடி வருகிறோம்.மாணவர்களாகிய நாம் ஒற்றை தலைமைக்கோ இரட்டை தலைமைக்கோ இடம் அளிக்க கூடாது கூட்டுத்தலைமை மட்டுமே முன்னிறுத்தப் படவேண்டும்.

என்னுடைய பெயரை பயன் படுத்தி தனிப்பட்ட முறையில் யாரும் அறிக்கையோ அல்லது வேறு செயல்களிலோ ஈடு படவேண்டாம் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மாணவர்களாகிய நாம் ஒட்டு மொத்த தமிழ் சமுகத்தையும் ஒரே குடையின்கீழ் இணைத்து தனித்தமிழீழம் அமைப்பதற்கு போராடவேண்டி இருக்கிறது.

மாணவர்களாகிய நாம் ஒற்றுமையாக இணைந்து போராடுவோம்
வாழ்த்துக்கள்

"தமிழ் எங்கள் குருதி
ஈழம் அது உறுதி "

ஆயுதம் தாருங்கள்... நாங்களே பார்த்துக் கொள்கிறோம்! - நாகை மீனவர்கள் போர்க் கொடி
இலங்கைக் கடற்படையிடம் இருந்து மீனவர்களைக் காப்பாற்ற எவ்வளவுதான் போராடியும் ஒரு பலனும் இல்லாத நிலையில், ''ஆயுதம் தாருங்கள்... நாங்களே போராடிக்கொள்கிறோம்'' என்று வாழ்வா, சாவா போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் தமிழக மீனவர்கள். 
நாகை நம்பியார் நகர் மீனவர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாக மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அறிவித்து, நாடாளுமன்றத் தேர்தல் வரை ஓயப்போவதில்லை என்று களம் இறங்கி இருக்கிறார்கள்.
கடந்த 21-ம் தேதி நாகப்பட்டினம் தாலுக்காவில் உள்ள நாகூர், ஆரியநாட்டுத் தெரு, சில்லடி, கல்லார், நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், அக்கறைப் பேட்டை, சாமந்தான் பேட்டை உள்ளிட்ட எட்டு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் ஒன்று திரண்டு ஆலோசனை நடத்தி இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். முதல் கட்டமாக 22-ம் தேதி நாகப்பட்டினம் தலைமைத் தபால் அலுவலகத்துக்கு எதிரே கூடியவர்கள், மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அடுத்ததாக 25-ம் தேதி ரயில் மறியல், அதற்கு அடுத்து எல்லா தாலுக்காக்களிலும் போராட்டம் என்று தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்போகிறார்கள்.
இதுகுறித்து நாகப்பட்டினம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவரும் அக்கறைப் பேட்டை பஞ்சாயத்தாருமான திருவளர்செல்வனிடம் பேசினோம். ''அண்டை நாடு, நட்பு நாடு என்று இந்தியா நட்பு பாராட்டும் இலங்கை அரசுதான் தொடர்ந்து எங்களைத் தாக்குகிறது. இரும்பு பைப்பால் அடி, உருட்டுக்கட்டையால் அடி, வலைகள் கிழிப்பு, மண்டியிடவைப்பது, துப்பாக்கிச் சூடு... இதெல்லாம் போய் இப்போது அரிவாள் வெட்டு வரை வந்துவிட்டார்கள். இதைவிடப் பெரிய கொடுமை வேறு ஏதாவது உண்டா? இப்படி ஒரு சம்பவம் நடந்து நான்கு நாள் ஆகிவிட்ட பின்னும் இந்திய அரசாங்கம் இதுகுறித்து ஒரு அறிக்கையாவது வெளியிட்டதா? நாங்கள் என்ன இந்த நாட்டின் அகதிகளா? எங்கள் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் தருவது? இதுவரை எல்லை தாண்டிவந்ததால் சுட்டோம் என்று சொன்னார்கள். இப்போது வெட்டுப்பட்டவர்கள் சாதாரண பைபர் படகில் நமது எல்லைக்குள்தானே தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள்? அவர்களை ஏன் வெட்டினார்கள்? இந்தக் கொடுமையை மத்திய அரசு ஏன் கண்டிக்கவில்லை? எங்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் வரையிலும் இந்தப் போராட்டங்கள் தொடரும்'' என்கிறார்.
தபால்நிலைய ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள், ''இனி எங்க பாதுகாப்பை நாங்கதான் பாத்துக்கணும். அவங்க அஞ்சாறு பேர் ஒரு போட்ல வந்து எங்களைத் தாக்கும்போது நூற்றுக்கணக்கான பேர் ஒன்று சேர்ந்து அவங்களைத் திருப்பித் தாக்க முடியாதா? இனியும் சும்மா இருந்தால், நாங்கள் கடலுக்குள் போகவே முடியாது. அரசாங்கத்துக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதனால் எங்கள் பாதுகாப்பை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். இலங்கை ராணுவத்துக்கு எதிராக நாங்களே போர் தொடுத்துக்கொள்கிறோம். எங்களுக்கு ஆயுதம் வழங்குங்கள். குறைந்தபட்சம் துப்பாக்கி வைத்துக்கொள்ளவாவது லைசென்ஸ் வழங்குங்கள்'' என்று முழங்கினார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடலோரப் பகுதிகளில் பெரும்பாலும் காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெற்றது. அதைச் சுட்டிக்காட்டும் மீனவர்கள், 'வரப்போகும் தேர்தலில் காங்கிரஸைக் கருவறுப்போம்’ என்று சபதம் செய்திருக்கிறார்கள்.
''இரண்டு கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலி நாட்டு வீரர்களை நம் நாட்டுக்குக் கொண்டுவர தூதரைக் கைதுசெய்வது வரை போனதே நம் மத்திய அரசு. அவர்களுக்குக் கேரள மீனவர்கள் மீது உள்ள அவ்வளவு அக்கறை, ஏன் நம் தமிழக மீனவர்கள் மேல் இல்லை? 540 மீனவர்களுக்கும் மேல் கொன்று குவித்த இலங்கையிடம் தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும். எல்லை தாண்டிவந்து எங்களைத் தாக்கும் இலங்கைக் கடற்படையினரை கைதுசெய்து நம் நாட்டுக்குக்கொண்டுவர வேண்டும். அதைச் செய்ய இவர்களுக்கு என்ன தயக்கம்? தங்கள் நாட்டு குடிமக்கள் மீது எந்த அக்கறையும் இல்லாத இந்திய நாட்டின் இறையாண்மையை யாரிடம் போய் நாங்கள் சொல்வது?'' என்கிறார் அகில இந்திய மீனவர் சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவர் கலைமணி.
இனியும் பாரபட்சம் காட்டினால் நாடாளுமன்றத் தேர்தலில் மீனவர்களிடம் ஒரு ஓட்டும் வாங்க முடியாது. 
http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13295
ஆயுதம் தாருங்கள்... நாங்களே பார்த்துக் கொள்கிறோம்! - நாகை மீனவர்கள் போர்க் கொடி
இலங்கைக் கடற்படையிடம் இருந்து மீனவர்களைக் காப்பாற்ற எவ்வளவுதான் போராடியும் ஒரு பலனும் இல்லாத நிலையில், ''ஆயுதம் தாருங்கள்... நாங்களே போராடிக்கொள்கிறோம்'' என்று வாழ்வா, சாவா போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் தமிழக மீனவர்கள்.
நாகை நம்பியார் நகர் மீனவர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாக மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அறிவித்து, நாடாளுமன்றத் தேர்தல் வரை ஓயப்போவதில்லை என்று களம் இறங்கி இருக்கிறார்கள்.
கடந்த 21-ம் தேதி நாகப்பட்டினம் தாலுக்காவில் உள்ள நாகூர், ஆரியநாட்டுத் தெரு, சில்லடி, கல்லார், நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், அக்கறைப் பேட்டை, சாமந்தான் பேட்டை உள்ளிட்ட எட்டு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் ஒன்று திரண்டு ஆலோசனை நடத்தி இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். முதல் கட்டமாக 22-ம் தேதி நாகப்பட்டினம் தலைமைத் தபால் அலுவலகத்துக்கு எதிரே கூடியவர்கள், மத்

காங்கிரஸ் காரர்களை எதிர்த்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக திருச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கருங்காலிகளை கைது செய்ய வலியுறுத்தி இன்று 28.03.2013 மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் எங்கள் 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதின் பொழுது எங்களிடம் பேசிய காவல்துறை ஆய்வாளர் -----, நானும் சீமான் வழி நடப்பவன் தான் என்றும். எப்பொழுது வேண்டுமானாலும் உதவி என்னிடம் கேளுங்கள் என்றும் தெரிவித்த அவர் நேற்றே நீங்கள் போரட்டத்தில் ஈடுபடுவீர்கள் என்று எதிர்பார்த்ததாக தெரிவித்தார்.
காங்கிரஸ் காரர்களை எதிர்த்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக திருச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கருங்காலிகளை கைது செய்ய வலியுறுத்தி இன்று 28.03.2013 மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் எங்கள் 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதின் பொழுது எங்களிடம் பேசிய காவல்துறை ஆய்வாளர் -----, நானும் சீமான் வழி நடப்பவன் தான் என்றும். எப்பொழுது வேண்டுமானாலும் உதவி என்னிடம் கேளுங்கள் என்றும் தெரிவித்த அவர் நேற்றே நீங்கள் போரட்டத்தில் ஈடுபடுவீர்கள் என்று எதிர்பார்த்ததாக தெரிவித்தார்.

29 மார்., 2013


நேர்படப் பேசு’ நிகழ்ச்சியில் நடந்தது என்ன?
அரசியல்வாதிகள், பல்துறை வல்லுனர்கள், போன்றோருடன் நேர்படப்பேசி, உண்மைகளை உலகத்தமிழர்கள் அறியும் வகையில் நடுநிலையுடன் நேரலையாக வழங்கி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி அதற்காக எதிர்கொள்ளும் பிரச்னைகள் எத்தகையவை என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இலங்கை ஆட்டக்காரர்களை வெளியேற்றாவிட்டால் சன் குழுமம் அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் அறிவிப்பு!

முதல் கட்டமாக சன் தொ.கா. வின் உரிமையாளரின் அணியான ஐதராபாத் ஐ பி எல் அணியில் இருந்து இலங்கை ஆட்டக் காரர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் , வரும் வெள்ளிக் கிழமை இரவிற்குள் சன் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும்


கடந்த 2011ம் ஆண்டு முதல் தமது இரு பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களில் ஒருவர் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி என்றும் மற்றயவர் செஞ்சோலையில் இருந்து கல்வி கற்றவர் என்றும் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் சுயநினைவை இழந்து விட்டார்: சுப்பிரமணியம் சுவாமி அதிரடி
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சுயநினைவிழந்து விட்டார் என்றும் தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் சுயமாக சிந்திக்காமல் பேசுகிறார்கள் என்றும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழீழம் இக்காலகட்டத்தில் சாத்தியமானதல்ல!- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
தமிழீழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக சட்டமன்றம் இயற்றிய தீர்மானம் வரவேற்கத்தக்கது. ஆனால், தனித் தமிழ் ஈழம் என்பது இந்தக் காலகட்டத்தில் சாத்தியமானது அல்ல என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் ஒருவரான

ஐ.நாவில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படுத்திய அரச சார்பற்ற நிறுவனம் அடையாளம் காணப்பட்டுள்ளது
நாட்டுக்கு நெருக்கடி நிலைமையை ஏற்படுத்திய அரச சார்பற்ற நிறுவனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையில்
 கடந்த 20 நாட்களாக இனி 10 நாட்களுக்கு முன் அனுமதி வாங்கினால் மட்டுமே பார்க்க அனுமதிக்க முடியும் என்று அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தனர்
. இதனால் சிறப்பு முகாமில் இருப்பவர்கள் கடந்த இருபது நாட்களாக வெளியிலிருந்து எந்த உணவு பொருட்களும் கிடைக்காமல் தனிமைபடுத்தப்பட்டனர். உறவினர்கள் சந்திப்பதற்கு வெளிநாட்டினர் சட்டபிரிவில் எந்த இடத்திலும் இல்லாத இந்த கெடுபிடிகளை எதிர்த்து

பூந்தமல்லி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர் தற்கொலை முயற்சி . மருத்துவமனையில் அனுமதி !



பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை தேவைகளுக்காக அரசாங்கத்தால் ஒரு நாளைக்கு 70 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது, இந்த ரூபாயில் தான் இவர்களின் அனைத்து தேவைகளையும் இவர்கள்

அகங்காரப் போக்கினால் ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவி பறிக்கப்படலாம்.அரசாங்க பத்திரிகை தினகரன் எழுதுகிறது 

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர்

3ஏ சித்தி கிடைத்தும் மருத்துவ பீட வாய்ப்பு கிட்டாதோருக்கு புலமைப்பரிசில்


தலா 70 இலட்சம் ரூபா வழங்கினார் ஜனாதிபதி
மாலபேயிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் இணைந்து மருத்துவ கல்வியை தொடர வாய்ப்பு
2011ம் ஆண்டு க.பொ.த. உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானத் துறையில் மூன்று 'ஏ' சித்திகளைப் பெற்றும் மருத்துவ கல்லூரிக்கு சேர முடியாமல் போ


பொதுவாக்கெடுப்பு கோரும் தமிழக அரசின் தீர்மானத்திற்கு கனடிய மக்களிடையே பெரும் வரவேற்பு  
 சிறிலங்கா தொடர்பான விவகாரங்களில் ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தினை கனடியத் தமிழ் மக்கள் சார்பில் கனடியத் தமிழர் தேசிய அவை வரவேற்றுள்ளதோடு, இத்தீர்மானத்தினை ஒருமனதாக நிறைவேற்றியமைக்காக தமிழக அரசுக்கும் , அரசியல் கட்சிகளுக்கும் பாராட்டுக்களையும் , நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளது. 
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; அடித்துக் கூறுகிறார் ஜெயலலிதா
எமது தனித் தமிழீழக் கோரிக்கையை வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. விரைவில் இந்தக் கோரிக்கை நிறைவேறும் என்று  அடித்துக் கூறினார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா.


இலங்கை கிரிக்கெட் அணியில் அமைச்சர் கெஹலியவின் மகன் இணைப்பு


பங்களாதேஷ் அணிக்கு எதிரான 16 பேர் கொண்ட இலங்கை அணியில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் 

ரம்புக்வெல்ல இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபது-20 போட்டி தொடர்களில் பங்கேற்கின்றது.

ad

ad