புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2013

 கடந்த 20 நாட்களாக இனி 10 நாட்களுக்கு முன் அனுமதி வாங்கினால் மட்டுமே பார்க்க அனுமதிக்க முடியும் என்று அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தனர்
. இதனால் சிறப்பு முகாமில் இருப்பவர்கள் கடந்த இருபது நாட்களாக வெளியிலிருந்து எந்த உணவு பொருட்களும் கிடைக்காமல் தனிமைபடுத்தப்பட்டனர். உறவினர்கள் சந்திப்பதற்கு வெளிநாட்டினர் சட்டபிரிவில் எந்த இடத்திலும் இல்லாத இந்த கெடுபிடிகளை எதிர்த்து
27/03/2013 முதல் சந்திரகுமார் என்பவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். சந்திரகுமாரை பார்க்க வந்த அவர் மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவரும் சிறப்பு முகாம் வாசலிலேயே உண்ணாவிரதத்தை தொடர்ந்துவந்தார். இந்நிலையில் நேற்று மாலை உண்ணாவிரதம் இருந்த சந்திரகுமாரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அவரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் தற்போது புழல் சிறையில் அடைத்து வைத்துள்ளது காவல் துறை .

தனது குடும்பம் கைதான செய்தியை அறிந்த சந்திர குமார் நேற்று இரவு தூக்க மாத்திரைகளை நிறைய உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் . அவரை சக முகாம் வாசிகள் காப்பாற்றி அரசுக்கு தகவல் கொடுத்தனர் . அவரை அவசமாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ந்தனர் காவல் துறை . சந்திர குமார் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சட்ட விரோதமாக இந்த ஈழத் தமிழர்கள் பூந்தமல்லி சிறையில் வெளிநாட்டவர் சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைகப்பட்டுள்ளனர். அவர்கள் முகாம்களில் குடும்பத்தோடு வாழ சட்டப்படி அனுமதி இருந்தாலும் காவல் துறை அதை அனுமதிப்பதில்லை . அதற்கு எதிராகத் தான் இப்போது சந்திர குமார் போராட்டம் செய்து முடிவில் மருத்தவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார் . சொந்தநாட்டில் ஈழத் தமிழர்கள் அகதி ஆக்கப் பட்டனர். இப்போது தாய் தமிழகத்திலும் அவர்கள் உரிமைகள் இழந்து அகதியாக , அடிமையாக வாழ்கின்றனர் . தமிழக அரசு இலங்கைக்கு எதிராக தீர்மானம் போட்ட அதே வேளையில் இங்குள்ள ஈழத் தமிழர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது.

ad

ad