புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2013


சைபர் தாக்குதல் பல்வேறு நாடுகளின் இணைய வலையமைப்பை முடக்கியுள்ளன - இலங்கைக்கு பாதிப்பில்லை
'சைபர் பங்கர்' என்று அடையாளம் காணப்பட்ட கணினி வைரஸ் ஒன்று உட்பட மேலும் சில வைரஸுகள் இணைந்து உலகின் பல்வேறு நாடுகளின் இணைய வலையமைப்பை முடக்கியுள்ளன. இதனால் பல்வேறு தரப்பினரும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இருப்பினும் இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று இலங்கை கணினி அவசரநிலை மற்றும் ஒருங்கிணைப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகிலுள்ள கணினி வலையமைப்பை முடக்குவதற்காக ஒரு நொடிக்கு 300 கிகா பைட்ஸ் தகவல்களை வலையமைப்புக்குள் செலுத்துவதே கணினி ஊடுருவாளர்களின் நோக்கமாகக் கொண்டிருந்துள்ளது.
குறிப்பிட்டுக் கூறுவதாயின், சிறிய அறையொன்றுக்குள் நல்ல உடற்பருமன் கொண்ட 25 பேரை மிகக் கஷ்டப்பட்டு ஒரே தடவையில் உட்புகுத்துவதற்கு சமமானதாகும் என கணினி வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகின் பிரதான கணினி மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு வலயங்கள் லண்டன், ஜெனீவா மற்றும் வொஷிங்டன் ஆகிய நகரங்களிலேயே அமைந்துள்ளன. கடந்த 2002ஆம் ஆண்டிலும் இவ்வாறானதொரு கணினி ஊடுருவல் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு தாக்குதலை 'சைபர் தாக்குதல்' என கணினி வல்லுனர்கள் பெயரிட்டுள்ளனர். இதுவரையில் இடம்பெற்ற வைரஸ் தாக்குதல்களில் இதுவே பாரிய தாக்குதலாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ad

ad