புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2013

நாவற்குழிக்குச் சொந்தம் கொண்டாடும் சிங்களவர்கள்
நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்களவர்கள், அதுவே தமது பூர்வீக கிராமம் போன்று சொந்தம் கொண்டாடத் தொடங்கியுள்ளதுடன், அங்கு ஒரு சிங்களப் பாடசாலையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 

போர் முடிவுக்கு வந்ததை அடுத்து தென்பகுதியில் வாழ்ந்து வந்த 135 சிங்களக் குடும்பங்கள் சிறிலங்கா அரசின் பின்புல ஆதரவுடன் நாவற்குழியில் உள்ள அரசகாணியில் அத்துமீறிக் குடியேறியுள்ளன.

இங்கு பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கு, யாழ்.நாகவிகாரையின் ஏற்பாட்டில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், பெருமளவு சிங்கள மக்கள் வசிக்கும் நாவற்குழியில், தமது பிள்ளைகள் கற்பதற்கு சிங்களப் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இடம்பெயர்ந்த சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அமைப்பின் தலைவர் மல்காந்தி விக்கிரமசிங்க இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்,

“தீவிரவாதம் முடிவுக்கு வந்த பின்னர் கிராமத்தில் (நாவற்குழியில்) வழமைநிலை ஏற்பட்டுள்ளது.

போர்க்காலத்தில் வெளியேறிய மக்கள் மீளத் திரும்பியுள்ளனர். அவர்கள் பிறந்த இடங்களில் மீளக்குடியேறியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்.போதனா மருத்துவமனையில் பிறந்துள்ளனர்.

இவர்கள் தற்போது இந்தப் பகுதியில் உள்ள தமிழ்மக்களுடன் அமைதியாக வாழ்கின்றனர்.

நாவற்குழியில் பெருமளவு சிங்களக் குடும்பங்கள் வாழ்கின்றன.

சிலர் தமது பிள்ளைகளைக் கல்வி அளிப்பதற்கான பாடசாலை வசதி இல்லாததால் தற்காலிகமாக வெளியேறியுள்ளனர்.“ என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமது பிள்ளைகளுக்கு ஒரு பாடசாலை தேவை என்றும், ஆனால் அதிகாரிகள் எவரும் அதற்கு முன்வரவில்லை என்றும் அத்துமீறிக் குடியேறிய ஒருவர் கூறியுள்ளார்.

சிங்களக் குடும்பங்கள் குடியேறியுள்ள நிலங்கள் வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமானது என்றும் அவர்கள் அங்கு தொடர்ந்து வசிப்பதற்கு சட்ட ஆதரவு தேவை என்றும் மல்காந்தி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு ஜாதிக ஹெல உறுமய, சிங்கள ராவய போன்ற சிங்களப் பேரினவாத அமைப்புகள் உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ad

ad